திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் முன்னூர்மங்கலம் கிராமத்தில் புதுப்பாளையம் ஒன்றிய கழக தலைவர் திராவிட பழனியின் வாழ் விணையர் ப.சந்திரமல்லி (வயது 56) 2-12-2021 அன்று உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் இயற்கை எய்தினார். அவர்களுக்கு செந்தமிழ் செல்வி, சங்கீதா என திருமணமான இரு மகள்கள் உண்டு.
திருவண்ணாமலை மாவட்ட கழகம் சார்பில் வேலூர் மண்டல செயலாளர் பி.பட்டாபிராமன், நகர தலைவர் சு.ஏழுமலை, மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.திருமலை ஆகியோர் ஆழ்ந்த இரங்கலையும் வீரவணக்கத்தையும், குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment