சென்னை: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 27, 2021

சென்னை: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை,டிச.27- சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். ஒமைக்ரான் சிகிச்சை மய்யம் மற்றும் படுக்கைகளின் நிலவரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும்  தானியங்கி ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தின் செயல்பாடுகளை முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் பார்வையிட்டார். ஒமைக்ரான் வைரஸ் பாதித்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை, தொற்றை எதிர்கொள்ள அங்கு எடுக்கப்பட்டுள்ள கூடுதல் நடவடிக்கை குறித்து மருத்துவத்துறை அதி காரிகளிடம் முதல்-அமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து சென்னை, டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள அவசர கால 'ஆக்சிஜன் சிலிண்டர்' சேமிப்பு கிடங்குகளில் முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் ஆய்வு செய்தார். அவருடன்  அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், துரைமுருகன், பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோரும் ஆய்வு செய்தனர்.

No comments:

Post a Comment