26.12.2021 அன்று நள்ளிரவு பொன்னேரியில் திராவிடர் கழகம் சார்பில் நிறுவப்பட்ட, சமூகநீதிக் காவலர், தந்தை பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதை அறிந்து, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் தலை மையில் திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர் செல்வம் மற்றும் அனைத்துக் கட்சித் தோழர்கள் பெருந் திரளாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெரியார் சிலையிலைருந்து பேரணியாக , கோட்டாட்சியர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளரிடம், தந்தை பெரியாரின் சிலையை, சேதப்படுத்தியவர், சேதப்படுத்த தூண்டியவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், விரைவாக சேதப் படுத்தப்பட்ட சிலையை சீர் செய்து தரவும் புகார் மனு வழங்கினர்.
உடனடியாக தந்தை பெரியார் சிலை சரி செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கப்பட்டது. கும்மிடிப்பூண்டி மாவட்ட திராவிடர் கழக தலைவர் புழல் த. ஆனந்தன், மாவட்டச் செயலாளர் இர. இரமேஷ், செ. உதயகுமார், பொன்னேரி ஒன்றிய தலைவர் மு.க. தமிழ்ச்செல்வன், பொன்னேரி ஒன்றிய செயலாளர் கெ.முருகன் , பொன்னேரி நகர தலைவர் வே.அருள், நகர செயலாளர் மு.சுதாகர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் க.கார்த்திகேயன், நகர இளைஞரணிச் செயலாளர் க.சுகன்ராஜ், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் க.ச.க.இரணியன் , புழல் ஒன்றிய செயலாளர் மு.உதயகுமார் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பு, ம.ம.க, எஸ்டிபிஅய், புரட்சிப் பாரதம், புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த ஏராளமான தோழர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment