கரோனா அறிகுறி உள்ளவர்களை பரிசோதனை முடிவு வரும் வரை தனிமைப்படுத்த வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 27, 2021

கரோனா அறிகுறி உள்ளவர்களை பரிசோதனை முடிவு வரும் வரை தனிமைப்படுத்த வேண்டும்

சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்சென்னை, டிச.27 கரோனா பரிசோதனை மேற்கொண்டவர் களுக்கு, பரிசோதனை முடிவு வரும் வரை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர் களுக்கு, டாக்டர் ஜெ.ராதாகிருஷ் ணன் கடிதம் எழுதியுள்ளார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செய லாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ் ணன், பெருநகர சென்னை மாநக ராட்சி ஆணையர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர் களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம் வருமாறு:-

தமிழ்நாட்டில் பொது இடங்கள், திருவிழா கூட்டங்கள்,  கொண்டாட்டங்கள், கடை வீதிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கரோனா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றாமல் மக்கள் இருந்து வருகின்றனர். உலகம் முழுவதும் தற்போது ஒமைக்ரான் வகை கரோனா வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. மேலும் டெல்டா வகை கரோனா வைரசும் தற்போது பரவலாக பரவி வருகிறது.

இந்தநிலையில் உலக சுகாதார நிறுவனமும், ஒன்றிய, மாநில அரசுகளும்தொடர்ந்து பாதுகாப்பு வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடை வெளி கடைப்பிடித்தல், கைகளை அடிக்கடி கழுவுதல் உள்ளிட்ட வைகளை முறையாக பின்பற்று வதன் மூலமும், கரோனாவை கட்டுப்படுத்த மக்களின் நடவடிக் கைகளில் ஒரு மாற்றம் ஏற்படுவதன் மூலமுமே இந்த கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கின்றன.

அறிகுறிகள் குறைவு

அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றுவதையும், தடுப்பூசி போடுவதையும் உறுதிசெய்ய வேண்டும்.

மேலும் மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகளின் ஊழியர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்கள், அங்கு வரும் நோயாளிகள் என பலர் முகக்கவசம் அணிவதை தவிர்க்கின்றனர்.

மேலும் சில மருத்துவமனை களில் கரோனா வார்டு மற்றும் ஒமைக் ரான் வார்டுகளில் போது மான பாதுகாப்பு இல்லாமல் இருந்து வருகிறது.

ஒமைக்ரான் தொற்று பாதிக் கப்பட்டவர்களுக்கு அறிகுறிகள் குறைவாகவே காணப்படுகிறது. சிலருக்கு அறிகுறிகள் தென்படு வதே இல்லை.

இதனால் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்ட வர்கள் தங்களுக்கு தெரியாமலே பரப்பும் அபாயம் ஏற்படுகிறது.

மேலும் மருத்துவமனைகளில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர் களுடன் முகக்கவசம் இல்லாமல் சந்திக்க நேரும்போது வைரஸ் தொற்றுப் பரவ அதிக வழிவகுக்

கிறது.

முதற்கட்ட ஆய்வில் ஒமைக்ரா னால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும், காற்றோட்டம் இல்லாத இடங்களில் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும்போதுதான் அதிகம் பரவியதாக தெரியவந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment