தென்னை மரம் போல் உயர்ந்தார்
செயல் மறவர் வீரமணி!
அன்னை மன ஆசிரியர்
அவர் வாழ்க நூறாண்டே!
தந்தை பெரியார் தம்
தத்துவப் பிள்ளையவர்!
முந்துவார் அய்யா புகழ்
முனைப்புடன் நாட்டிட வே!
உலகின் பல நாடுகளில்
ஓங்கி நிற்கப் பெரியார் சிலை
மலையளவு பணி புரிந்த
மா திறனார் வீரமணி!
‘விடுதலை’ நாளிதழ்
வெல்ல வைத்த ஆசிரியர்!
ஒடுக்கப்பட் டார் நீதி
உரிமை பெற உழைத்தவரே!
மணியம்மை புகழ் பரப்பி
மகளிர் குலம் மகிழவைப்பார்!
இனிய ‘திராவிடர் கழகம்‘
தலைவர் இவர் அரிமாவே
ஆண்டு தோறும் திசம்பர்
இரண்டாம் நாள் பிறந்த நாள்
காண்பவர்க்கே மறைமலையான்
கனித் தமிழால் வாழ்த்துவனே!!
அ.மறைமலையான்
(‘கலைமாமணி’ முதலான மூன்று தமிழ்நாடு அரசு விருதுகள் வென்றவர்) சென்னை
No comments:
Post a Comment