அறிவின் தெளிவே!
அகன்ற பேரறிவே!
அனுபவ முதிர்ச்சி யே!
அணுகுமுறை அறிந்தவரே!
பழைமை எண்ணத்தால்
பாழ் பட்ட மனிதனை
புதுமைத் தெளிவால்
புரட்டிய பெருமகன்!
அய்யா பெரியாரின்
அடிச்சுவடே வீரமணி!
உழைக்கும் வர்க்கத்தின்
உற்ற பெருந் தோழரே!
உணர்வுதனைத் தட்டிய
உயர் பெருந்தலைவா!
ஆராய்ந்து அறிந்த
ஆய்வுத் தொகுப்பு!
ஆராயத் தூண்டும்
ஆகச்சிறந்த பேச்சு!
சுருங்கச் சொல்லி
விளங்க வைக்கும்
சுவைமிகு சொற்பொழிவு!
மகளிரும் மாண்பு பெற
மன்றாடும் தந்தையே!
பத்து வயது முதல்
பகுத்தறிவு பேசி
மக்கள் மனதிலே
மனிதம் தூண்டிய
மாமணியே !வீரமணி!
அகவை
எண்பத்தொன்பதில்
அடி எடுத்து வைக்கும்
எம் தந்தையே!
வீரமணி வாழ்க!
உற்ற துணை யோடு
உயர் சுற்றமும்
உயிர்க் கொள்கை
உண்மைத் தொண்டரும்
வாழ்த்துகின்றோம்!
எம் தந்தையே!வீரமணி!
வாழ்க!வாழ்க!பல்லாண்டு!!
பு.பேபிசாந்தா தேவி
பொதுக்குழு உறுப்பினர்
போடிநாயக்கனூர்
தேனி மாவட்டம்
No comments:
Post a Comment