'ஒமைக்ரான்' தொற்று பரவல் பள்ளிகளில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 4, 2021

'ஒமைக்ரான்' தொற்று பரவல் பள்ளிகளில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகள்

கல்வித்துறை உத்தரவு

சென்னை, டிச. 4- ஒமைக் ரான் தொற்று பரவல் எதிரொலியாக பள்ளி களில் கரோனா வழி காட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

ஒமைக்ரான்நோய்த் தொற்று இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டது. இதனையடுத்து அனைத்து மாநில அரசு களும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றன. அந்தவகையில் தமிழ்நாடு அரசின் கல்வித்துறையும் இதில் அதிக கவனத்தை காட்ட தொடங்கியுள் ளது. அதன்படி, ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், அந்த மாவட் டத்தின் அனைத்து பள் ளிகளுக்கும் ஒரு சுற்ற றிக்கை அனுப்பியிருக்கி றார். அதில், ஒமைக்ரான் தொற்று விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்த அறி வுரைகள் வழங்கப்பட்டுள் ளது. அந்த அறிவுரைக ளில் சில முக்கிய அம்சங் கள் வருமாறு:-

* அரசிடம் இருந்து பெறப்பட்ட வழிகாட்டு நெறி முறைகளில் கூறப்பட் டுள்ள அறிவுரைகளை தவறாது அனைத்து வகை பள்ளிகளும் பின்பற்ற வேண் டும். பள்ளிகள் நேரடியாக அல்லது ஆன் லைன் வாயி லாக வகுப்புகள் நடத்தலாம்.

* அனைத்து வகை பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை கண்டிப்பாக சுழற்சி முறையில் மட் டுமே வகுப்புகள் நடத்த வேண்டும். இது மாணவர் களுக்கு மட்டுமே பொருந் தும். ஆசிரியர்களுக்கு பொருந்தாது.

* அனைவரும் முக கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்யவேண்டும். ஆசிரியர்கள் மாணவர்க ளுக்கு முன்மாதிரியாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும். எல்லா நேரங் களிலும் சமூக இடை வெளிக்கான விதிமுறை களை பின்பற்ற வேண்டும்.

* கூட்ட நெரிசலுக்கு வழிவகுக்கும் இறை வணக்க கூட்டம், விளை யாட்டு நிகழ்ச்சிகள் மற் றும் கலாசார நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட வேண்டும். நீச்சல் குளங்கள் பள்ளி களில் இருந்தால் மூடப் பட வேண்டும்.

* உடற்கல்வி மற்றும் விளையாட்டுகளுக்கான பாடவேளைகள் அனு மதிக்கப்படாது. நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை நடவடிக்கைகள் அனுமதிக்கக்கூடாது என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப் பட்டுள்ளன. இதேபோல், மற்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும், பள்ளிகளுக்கு அறிவுரை களை வழங்கி இருப்பதா கவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment