ஆசிரியருக்கு வாழ்த்து! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 4, 2021

ஆசிரியருக்கு வாழ்த்து!


அய்யாவும் அன்னையும்

கற்றுத் தந்த வழியிலே

கழகம் காக்கும் பணியிலே

எண்பது ஆண்டு பொது வாழ்வு

ஏற்றம் பெற்றது பலர் வாழ்வு !

 

பட்டம் பதக்கம் பல பெற்று

பகுத்தறிவுப் பாதையில் நடந்தார்

சுயமரியாதை சுக வாழ்வால்

சோதனைகள் பல கடந்தார் !

 

இளைய தலைமுறைக்கு

இன உணர்வை ஊட்டினார்

தமிழினத்தின் பகை வெல்ல

தணலை தானே மூட்டினார் !

 

பெரியார் வழி செல்வதனால்

பெருமை என்ன கிடைக்குமென

கேட்டு கேலி செய்த கூட்டத்திற்கு

"உலகிலேயே சிறந்த மனிதநேயர்"

விருது கிடைக்கும் என்று காட்டினார்

தந்தை பெரியார் கொள்கைகளை

தரணி எங்கும் நிலை நாட்டினார் !

 

பெரியார் உலகம் அமைப்பதை

பெருங்கனவாக கொண்ட நம்

மானமிகு ஆசிரியர்

வாழ்க நூறாண்டு !!

- இராம. வைரமுத்து

வழக்குரைஞர், மதுரை

- - - - -

தமிழர் தலைவர் வாழ்க

தமிழர் தலைவர் வாழ்க

தமிழர் தலைவர் வாழ்க

வாழ்க வாழ்க வாழ்க  -எங்கள்-

தமிழர் தலைவர் வாழ்க

 

தளராத உழைப்பாளர்

அயராத படிப்பாளர்

திராவிடத்தின் விளக்காளர்

விடுதலைக்கு பொறுப்பாளர்

எங்கள் -தமிழர் தலைவர் வாழ்க

களம் நின்று போராடும்

களப்பணியாளர்

பெரியார் மொழி தவிர வேறொன்று

பேசாத பேச்சாளர்

திராவிடம் என்ற தத்துவத்தின்

விரிவுரையாளர்

பெரியார் என்னும் தேசத்தின்

முதன்மை காப்பாளர்

 

வாழ்க வாழ்க வாழ்க -எங்கள்

தமிழர் தலைவர் வாழ்க

 

ஆரியத்தை இடித்துரைக்கும்

கருத்துரையாளர்

அறவழியை கற்றுத்தரும்

பேரருளாளர்

வேதநெறி விரட்டி நிற்கும்

பகுத்தறிவாளர்

மேதினியில் மானமிகு

சுயமரியாதைக்காரர்

 

வாழ்க வாழ்க வாழ்க -எங்கள்

தமிழர் தலைவர் வாழ்க

 

வாழ்வியலை கற்றுத்தரும்

சிந்தனையாளர்

வகுத்த பாதையில் சென்று காட்டும்

சாதனையாளர்

அணுவை கூட துளைத்துச் செல்லும்

கூர்மதியாளர்

வருமுன் உரைக்கும் சமூக நீதி

வானியலாளர்

 

வாழ்க வாழ்க வாழ்க -எங்கள்

தமிழர் தலைவர் வாழ்க

 

அணுகாது அகலாது

அரசின் தோழர்

வெண்தாடி வேந்தருக்கு

வாரிசுதாரர்

பொய் புரட்டு விரட்டியடிக்கும்

பகுத்தறிவாளர்

பெரியாரின் கொள்கையெனும்

பேருலகத்தின் பெருந்தனக்காரர்

 

வாழ்க வாழ்க வாழ்க -எங்கள்

தமிழர் தலைவர் வாழ்க

 

அண்ணன் தம்பி பாசம் காட்டும்

பண்புடையாளர்

எண்ணும் எழுத்தும் பெரியாரரெனும்

வாழ்வியலாளர்

கருப்பு சட்டை போட்டு வரும்

சூரியக்காரர்

விடுதலை ஆசிரியர் வீரமணி எனும்

பெரு வெடிப்பாளர்

- கோசின்ரா


No comments:

Post a Comment