உலகளவிலான கூட்டுறவு நிறுவனங்கள்-இந்தியாவின் ‘இப்கோ’வுக்கு முதலிடம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 4, 2021

உலகளவிலான கூட்டுறவு நிறுவனங்கள்-இந்தியாவின் ‘இப்கோ’வுக்கு முதலிடம்

 புதுடில்லி, டிச. 4- கூட்டுறவு நிறுவனமானஇப்கோ’, உலகளவில் உள்ள 300 கூட் டுறவு நிறுவனங்கள் தரவரிசை பட்டிய லில் முதலிடத்தை பிடித்துள்ளது.

புதுடில்லியை தலைமையிடமாக கொண்டு, செயல்பட்டு வரும் இப்கோ, உரங்கள் தயாரிப்பு மற்றும் சந்தைப் படுத்துதலில் ஈடுபட்டு வருகிறது. பன்னாட்டு கூட்டுறவு நிறுவனங்களின் கூட்டமைப்பால் வெளியிடப்பட்ட, ‘உலக கூட்டுறவு கண்காணிப்பு அறிக்கை 2021’ பதிப்பின்படி, கூட்டுறவு நிறுவனங் களின் தரவரிசைப் பட்டியலில், இப்கோ முதலிடத்தை பிடித்துள்ளது.

தனிநபர் மொத்த உள்நாட்டு உற் பத்தியில், நிறுவனத்தின் விற்றுமுதல் விகிதத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்த தரவரிசை தயாரிக்கப்பட்டுள் ளதாக, இப்கோ தெரிவித்துள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் யு.எஸ். அவஸ்தி கூறியதாவது: விவசாயிகளின் வருமானத்தை இரட் டிப்பாக்கும் நோக்கத்தில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

புதுமை தான் வெற்றிக்கான திறவு கோல் என்பதை நாங்கள் நம்புகிறோம். அதனால் தான்நானோதொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளை அறி முகம் செய்து வருகிறோம்.குறிப்பாக, ‘நானோ யூரியா லிக்விட்உள்ளிட்ட வற்றை அறிமுகம் செய்து வருகிறோம். இதற்கு விவசாயிகளிடையே பலத்த வரவேற்பு கிடைத்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment