மாவட்டத்துக்கு ஒரு சட்டக்கல்லூரி என்பதே முதலமைச்சரின் லட்சியம் சட்டத்துறை அமைச்சர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 28, 2021

மாவட்டத்துக்கு ஒரு சட்டக்கல்லூரி என்பதே முதலமைச்சரின் லட்சியம் சட்டத்துறை அமைச்சர் தகவல்

காரைக்குடி, டிச. 28 தேர்தல் அறிக்கையில் தெரிவித்து உள்ளதுபோல் மாவட்டத்துக்கு ஒரு சட்டக்கல்லூரி அமைப் பதே முதலமைச்சரின் லட்சியம் என சட்டத்துறை அமைச்சர் என்.ரகுபதி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அண்ணா தமிழ் கழகம் சார்பில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தலைமையில் 49ஆம் ஆண்டு அண்ணா விழா கொண்டாடப்பட்டது.

இதில், அண்ணா விருது வழங்கி சட்டத்துறை அமைச் சர் என்.ரகுபதி பேசுகையில், சட்டக்கல்லூரியின் முக்கியத்து வம் உணர்ந்து தேர்தல் அறிக்கையில் மாவட்டத்துக்கு ஒரு சட்டக்கல்லூரி அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  இதனை செயல்படுத்து வதை லட்சியமாக கொண்டுள்ளார்.  விரைவில் அதற்கான நடவடிக்கை எடுப்பார் என்று கூறினார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு

நியாய விலைக் கடைகளில் முன்கூட்டியே டோக்கன் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை, டிச.28- பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க நியாயவிலைக் கடைகளில் டோக்கன் வினியோகம் செய் யப்படும் என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.

பொங்கல் வி££வை சிறப்பாக கொண்டாடும் விதத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தாருக்கும் பச்சரிசி, வெல்லம், கரும்பு, துணிப்பை உள்ளிட்ட 21 பொருட் கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜனவரி 3ஆம் தேதியில் இருந்து இந்த பொருட்களை வழங்கலாம் என்று ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந் தது. இந்த நிலையில் இந்த உத்தரவை செயல்படுத்துவதற் கான கடிதத்தை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், சம்பந்தப்பட்ட மற்ற அதிகாரிகளுக்கும் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

21 பொருட்களை கொண்ட பொங்கல் பரிசுத்தொகுப்பு 2 கோடியே 15 லட்சத்து 29 ஆயிரத்து 114 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும்; 18 ஆயிரத்து 946 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தாருக்கும் வழங்கப்பட வேண்டும்.

இவற்றை உரிய முறையில் வினியோகம் செய்ய வேண்டிய முழுப்பொறுப்பும் மாவட்ட ஆட்சியர்களையே சாரும். பரிசுத்தொகுப்பு வினியோக பணி தொடங்கும் நாள் பற்றிய அரசின் அறிவுரை வந்ததும் தனியே தெரிவிக்கப் படும். ஜனவரி 7ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நியாய விலைக் கடைகளுக்கு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக 15ஆம் தேதி (சனிக்கிழமை) விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

ஒரே நேரத்தில் குடும்ப அட்டைதாரர்கள் கடைகளில் குவிந்து விடுவதை தவிர்க்கவும், கரோனா தொற்று பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வசதியாகவும், தெருவாரியாக சுழற்சி முறையில் 150 முதல் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

அதை அவர்களுக்கு வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு டோக்கனை முன்கூட்டியே வழங்க வேண்டும். குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதை உறுதி செய்யும் வகையில் அவர்களின் ஒப்புதலை பெற வேண்டும்.

யாரும் விடுபட்டுவிடக்கூடாது. எந்த சிரமமும் இல்லா மல் நியாயவிலைக் கடைகளில் மக்களுக்கு பரிசுத்தொகுப்பு வழங்க வேண்டும். குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ள உறுப்பினர் யாரும் கடைக்கு வந்து பரிசுத் தொகுப்பை பெறலாம். வரிசையில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். வரிசையில் ஆண்கள் தனியாகவும், பெண்கள் தனியாகவும் நிற்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குழந்தைகள், பெண்கள் மீதான

குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு வாகனம்

கோவை, டிச. 28- குழந்தைகள் மீதான பாலியல் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக பல்வேறு நட வடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு காவல்துறை, அனைத்து தரப்பு பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ரூ.20 லட்சம் மதிப்பிலான ஒளி, ஒலி கட்டமைப்பு அகன்ற திரையுடன் கூடிய பல்நோக்கு பயன்பாட்டு விழிப்புணர்வு வாகனம் காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

இந்த வாகனத்தின் 4 புறமும் பொருத்தப்பட்டுள்ள கண் காணிப்பு கேமராக்கள் மூலம் வாகனத்தின் சுற்றுப்பகுதி களில் நடைபெறும் நிகழ்வுகளை காணவும், அதனை பதிவு செய்யவும், தேவைப்பட்டால் உரிய நடவடிக்கைகள் எடுக் கும் பொருட்டும், பாதுகாப்பு பணியிலும் இந்த வாகனத்தை பயன்படுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்த வாகனம், விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மேற்கொள்வது மட்டுமின்றி, சூழ்நிலைக்கு ஏற்ப அனைத்து சட்டம் மற்றும் ஒழுங்குப் பணிகளுக்கும் அவசர காலங்களில் நடமாடும் கட்டுப்பாட்டு அறையாக செயல்படும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. விழிப் புணர்வு வாகனம் சென்னையிலிருந்து இன்று கோவைக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த வாகனம் கோவை மாநகர காவல்துறை ஆணை யர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த வாகனம் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நட வடிக்கை எடுக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment