பத்திரிகையாளர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 28, 2021

பத்திரிகையாளர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி!

 சென்னை பத்திரிகையாளர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம்!

சென்னை, டிச. 28- சென்னை பத்திரிகையாளர் யூனியனின் (விஹியி) 67ஆம் ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் 26.12.2021 அன்று ரிச்சி தெருவில் உள்ள சங்க அலுவலகத்தில் நடை பெற்றது.

இதில், 2021ஆம் ஆண் டுக்கான வேலை அறிக்கை மற்றும் வரவு செலவு அறிக்கையை பொதுச் செயலாளர் எல்.ஆர்.சங் கர் பொருளாளர் வி.மணிமாறன் ஆகியோர் தாக்கல்செய்தனர். பொதுக் குழுவில் ஒரு மனதாக அய்ந்து தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட் டன. முதலாவதாக, தமிழ் நாட்டின் முதலமைச்ச ராக மு..ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற வுடன், செய்தித்தாள், காட்சி, ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர். முன் களப் பணியாளர்களாக கருதப்படுவர். முன்களப் பணி யாளர்களுக்கான உரிமைகளும் சலுகைக ளும் உரிய முறையில் வழங்கப்படும் என அறிவித்தார். அவரது இந்த அறிவிப்புக்கு சென்னைப் பத்திரிகையாளர் யூனி யன் நன்றிகளை தெரிவித் துக்கொள்கிறது.

கரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிகை மற் றும் ஊடகவியலாளர் களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப் பீடு வழங்கப்படும். பத்தி ரிகை மற்றும் ஊடகவிய லாளர்களுக்கு வழங்கப் படும் சிறப்பு ஊக்கத் தொகை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப் புகள், ஊடகத் துறையின ரின் கரோனா கால துய ரங்களை குறைத்து நம் பிக்கை அளிக்கக் கூடிய தாக அமைந்தது.

முதலமைச்சரின் விரி வான மருத்துவக் காப்பீட் டுத் திட்டத்தில், அரசு அங்கீகார அட்டை வைத் திருக்கும் பத்திரிகையா ளர்களின் குடும்பங்கள் சேர்க்கப்பட்டதுடன், இந்தத் திட்டத்தில் பயன் பெறுவதற்கான வருமான உச்ச வரம்பில் தமிழ்நாடு அரசு விலக்கு அளித்துள் ளது. கடந்த ஆட்சியில் பத்திரிகையாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக் குகள் அனைத்தையும் திரும்பப் பெற்றது என ஊடகத் துறைக்காக முத லமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நட வடிக்கை களை எடுத்து உள்ளார்.

முத்தமிழறிஞர் கலை ஞர் அவர்கள், உச்ச பதவி களை அடைந்த போதும் தன்னைப் பத்திரிகையா ளர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் பட்டவர். அவருடைய தொடர்ச்சியாக, அவர் வழியில் முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள் எடுத்திருக்கும் இந்த நட வடிக்கைகளுக்கு பொதுக் குழுநன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

பத்திரிகையாளர்க ளுக்கு வழங்கப்பட்டு வரும் திட்டங்களை ஒருங்கி ணைப்பதுடன், நலத் திட்ட உதவிகளையும் வழங்கும் வகை யில் பத்தி ரிகையாளர் நல வாரியம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சிஅளிக்கிறது என தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment