சென்னை, டிச. 28- தமிழ்நாடு அரசின் பல்வேறு துறை களில் டி.என்.பி.எஸ்.சி. மூலம் 2022ஆம் ஆண்டு 12,263 காலி பணியிடங் கள் நிரப்பப்பட உள்ளன. இதில் குரூப்-2,குரூப்-2ஏ, குரூப்-4 பதவிகளில் மட் டும் 11,086 காலி இடங்கள் இருப்பது குறிப்பிடத்தக் கது.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் பணியா ளர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியா ளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலமாக தேர்வு செய்யப்படுகின்ற னர். இதற்காக டி.என்.பி. எஸ்.சி. அவ்வப்போது போட்டித் தேர்வுகளை நடத்தி, தகுதியான நபர் களை தேர்வு செய்துஅரசு துறைகளுக்கு வழங்குகி றது.
இந்நிலையில், 2022ஆம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக் கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி சமீபத்தில் வெளியிட்டது. அதில் 32 போட்டித் தேர்வுகளுக் கான அறிவிப்புகள் இடம் பெற்றன.
2022ஆம் ஆண்டு அர சின் பல்வேறு துறைகளில் 12,263 காலி இடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில் குரூப்-2, குரூப்-4 பத விகளில் மட்டும் 11,086 காலிஇடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. குரூப்-2, குரூப்-2ஏ தேர்வு மூல மாக 5,831 இடங்களும், குரூப்-4தேர்வு மூலமாக 5,255 இடங்களும் நிரப் பப்பட உள்ளன. குரூப்-2 தேர்வை பட்டதாரிகளும், குரூப்-4 தேர்வை 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் களும் எழுதலாம்.
மேலும், சிவில் நீதிபதி தேர்வு மூலம் 245 காலி இடங்களும், குரூப்-1 தேர்வு மூலம் 49 காலி இடங்களும், ஒருங்கி ணைந்த பொறியியல் பணி தேர்வு மூலம் 167 காலி இடங்களும் நிரப் பப்படுகின்றன. இந்து சமய அறநிலையத் துறை யில் செயல் அலுவலர் பதவியில் (கிரேடு-1, 3, 4) மொத்தம் 65 காலி இடங் கள் உள்ளன.
அதிக எண்ணிக்கையி லான தேர்வர்கள் பங் கேற்கும் குரூப்-2தேர்வுக் கான அறிவிப்பு பிப்ரவரி யிலும், குரூப்-4 தேர்வுக் கான அறிவிக்கை மார்ச்சி லும் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
அனைத்து தேர்வுக ளுக்கான புதிய பாடத் திட்டம், தேர்வு திட்டம், அனைவருக்கும் பொது வான கட்டாய தமிழ் மொழித் தாள் தேர்வு பாடத் திட்டம், தேர்வு திட்டம் ஆகியவற்றை தேர்வாணையத்தின் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment