கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை
பட்டுக்கோட்டை,டிச.28- பட்டுக் கோட்டை எஸ்.பி.செல்வம் என்று அழைக்கப்பட்ட பட்டுக்கோட்டை பன்னீர்செல்வம் அவர்கள் மந்திரமா ?தந்திரமா? நிகழ்ச்சியினை தமிழ் நாடு முழுவதும் சென்று பிரச்சாரம் செய்தவர். அவர் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சியோடு சிறப்பாக கழக பாடல்களையும் பாடக்கூடியவர் .
தந்தை பெரியாரை போலவும் எம்.ஆர்.ராதா போலவும் பல குரல்களில் பேசக்கூடியவர் . தந்தை பெரியார் மீதும் அன்னை மணியம் மையார் மீதும் பற்று கொண்டது போலவே தமிழர் தலைவர் அவர்கள் மீதும் மிகுந்த பற்று கொண்டவர். கடைசிவரை கொள்கைவாதி யாகவே இருந்து மறைவுற்றார்கள். அவர் திருச்சி துப்பாக்கி தொழிற் சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 17.3.1936இல் பிறந்த அவர் 15.12.2021 இல் உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார். அவர் மறைவுற்றதை அறிந்து கழகத் தோழர்கள் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் திருவெறும்பூர் ஒன்றியத்தைச் சேர்ந்தவர்களும் ஏராளமாக வந்து அவருக்கு மரியாதை செலுத்தினார்கள்.
திருச்சி மாவட்ட தலைவர் ஞா. ஆரோக்கியராஜ், கழக தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர் திரு வெறும்பூர் ஒன்றிய கழகத் தலைவர் வ.மாரியப்பன் ஒன்றிய செயலாளர் இரா.தமிழ் சுடர் மண்டல மகளி ரணி செயலாளர் கிரேசி மாவட்ட மகளிரணி தலைவர் ரெஜினா பால்ராஜ், மாவட்ட மகளிரணி செயலாளர் சாந்தி சுரேஷ், மகளிர் அணி பொறுப்பாளர்கள் வசந்தி, சங்கீதா, பெல்.ம. ஆறுமுகம் கல் பாக்கம் ராமச்சந்திரன், காட்டூர் சங்கிலி முத்து காட்டூர் கனகராஜ் காட்டூர் பாலசுப்பிரமணியன் திருச்சி மார்க்கெட் நேதாஜி, துப் பாக்கி தொழிற்சாலை பால்ராஜ் கருணாநிதி உள்ளிட்ட கழகத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் மாலை 4.00 மணிக்கு நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் ஆறுமுகம் தலைமை ஏற்று உரை நிகழ்த்தினார்.ஒன்றிய தலைவர் மாரியப்பன் ஒன்றிய செயலாளர் தமிழ்ச்சுடர், கிரேசி, ரெஜினா பால்ராஜ், கல்பாக்கம் ராமச்சந்திரன், துப்பாக்கி தொழிற் சாலை பால்ராஜ், சின்னசாமி, பிஎச்இஎல் ராஜலிங்கம் ஆகியோர் இரங்கல் உரை ஆற்றினார்கள் அவருடைய இறுதி நிகழ்வு எந்தவித மூடநம்பிக்கையும் இன்றி அண்ணா நகர் இடுகாட்டில் எரியூட்டப் பட்டது. மகளிர் இடுகாட்டுக்கு வரக்கூடாது என்ற மூட நம்பிக் கையை நமது மகளிரணி தோழி யர்கள் முறியடித்து இடுகாடு வரை வந்து அவருக்கு மரியாதை செலுத் தியதை பலரும் ஆச்சரியத்தோடு பார்த்தார்கள்.
No comments:
Post a Comment