சென்னை, டிச. 28- ஒமைக்ரான் வைரசை தடுக்க எடுக்கப்பட் டுள்ள நடவடிக்கைகள் குறித்து சென்னை விமான நிலையம் மற்றும் கிங்ஸ் மருத்துவ மனையில் நேற்று (27.12.2021) ஒன்றிய நிபுணர் குழுவினர் ஆய்வு நடத்தினர்.
ஒமைக்ரான் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களில் எடுக்கப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டோருக்கு வழங் கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுக்களை ஒன்றிய அரசு நிய மித்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டிற்கு மருத்துவர் வினிதா தலைமையிலான மருத்துவர்கள் பர்பசா, சந்தோஷ் குமார், தினேஷ்பாபு உள் ளிட்ட 4 பேர் கொண்ட ஒன் றிய நிபுணர் குழுவினர் 26.12.2027 அன்று சென்னை வந்த டைந்தனர்.
தொடர்ந்து நேற்று (27.12.2021) சென்னை தேனாம் பேட்டையில் உள்ள மருத்து வம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தில் மருத்துவம் மற் றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதன்மை செயலாளர் டாக் டர் ராதாகிருஷ்ணன் ஆகி யோரை சந்தித்து தமிழ்நாட் டில் ஒமைக்ரான் பாதிப்பு நிலை குறித்தும், எடுக்கப்பட்டு வரும் தடுப்பு நடவடைக்கைகள் குறித்தும் ஒன்றிய குழுவினர் கேட்டறிந்தனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பல் வேறு கட்ட தடுப்பு பணிகள் குறித்தும் ஒன்றிய குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த கூட்டத்தை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:-
தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு குறித்து விவரங்களை ஒன்றிய அரசின் மரபணு ஆய் வகங்கள் பரிசோதனை செய்து அறிவிக்கிறது. தமிழ்நாட்டில் ஒமைக்ரான் அறிகுறி 97 பேருக்கு கண்டறியப்பட்டுள் ளது. இவர்களின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வர வில்லை. 10 நாட்களுக்கு பின் தொற்று இருப்பதாக புனே, அய்தராபாத், பெங்களூரு மர பணு ஆய்வகங்களில் இருந்து தகவல் வருகிறது. ஆனால், அதற்குள் பலர் குணமடைந்து செல்லும் நிலை உள்ளது. இங் குள்ள மரபணு ஆய்வகத்தின் மூலம் பரிசோதனை செய்து முடிவுகளை அறிவித்தால் எவ்வளவு பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருக்கிறது என்பது விரைவாக தெரியவரும்.
சென்னையில் உள்ள மர பணு ஆய்வகத்தில் ஒமைக்ரான் பரிசோதனைக்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்க வேண் டும். இதன்மூலம் உடனுக்குடன் ஒமைக்ரான் பாதிப்பை கண்ட றிய முடியும்.
தற்போது பாதிப்பு இல்லாத நாடுகளில் இருந்து தமிழ்நாட் டுக்குவருபவர்களில் 2 சதவீதம் பேருக்கு மட்டுமே கரோனா பரிசோதனை மேற்கொள்ளப் படுகிறது. இதனை 10 சதவீத மாக உயர்த்த வேண்டும் என ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி னோம். கடிதம் எழுதி ஒரு வாரம் கடந்துவிட்ட நிலையில் இன்னும் பதில் வரவில்லை. இதற்கு அனுமதி கிடைத்தால் தொற்று பரவலை வெகுவாக குறைக்க முடியும். இவை அனைத்தையும் ஒன்றிய அரசி டம் தெரிவிக்க வேண்டும் என ஒன்றிய நிபுணர் குழுவினரிடம் தெரிவித்துள்ளோம். வெளி நாடுகளில் இருந்து வருபவர் களுக்கு மட்டும் ஒமைக்ரான் தொற்று இருந்த நிலை மாறி சமூக தொற்றாகவும் மாறி வரு கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆலோசனை கூட் டத்தை தொடர்ந்து ஒன்றிய நிபுணர் குழுவினர் நேற்று மாலை சென்னை விமான நிலை யத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு நடவடிக் கைகள், வெளிநாட்டு பயணிக ளுக்கு செய்யப்படும் கரோனா பரிசோதனை, ஒமைக்ரான் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து சென்னை கிண்டி கிங்ஸ் கரோனா அரசு மருத்துவமனையில் ஒமைக் ரான் தொற்றால் பாதிக்கப்பட் டவர்களுக்கு சிகிச்சைகள் வழங்க நிறுவப்பட்டுள்ள வார் டுகளை ஆய்வு செய்தனர். அப் போது அங்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஒன்றிய நிபுணர் குழுவினர் மருத்துவர் களிடம் கேட்டறிந்தனர். இந்த குழுவினர் தொடர்ந்து 3 முதல் 5 நாட்கள் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டு வரும் ஒமைக் ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
No comments:
Post a Comment