கரோனா பரவலை கட்டுப்படுத்த “தேவைப்பட்டால் ஊரடங்கு விதிக்கலாம்” - மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 28, 2021

கரோனா பரவலை கட்டுப்படுத்த “தேவைப்பட்டால் ஊரடங்கு விதிக்கலாம்” - மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி

புதுடில்லி, டிச.28 கரோனா பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் மாநிலங்களில் ஊரடங்கை அமல்படுத்தலாம் என்று மாநில அரசுகளுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில், கரோனா பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் மாநிலங்களில் ஊரடங்கை அமல்படுத்தலாம் என்று மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இது தொடர்பாக உள்துறை அமைச்சகச் செயலாளர் அஜய் பல்லா வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளதாவது: கரோனா  வைரசும் ஒமைக்ரான் வைரசும் பல்வேறு மாநிலங்களில் பரவி வருகிறது. கரோனா பரவல், ஒமைக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசுகளே முடிவு எடுத்து, சூழலை ஆய்வு செய்து தேவைப்பட்டால் உள்ளாட்சி அளவில், அல்லது மாவட்ட அளவில் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து முடிவு எடுக்கலாம்.  விழாக் காலங்களில் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தத் தேவைப்பட்டால் கட்டுப்பாடுகளை விதிக்கலாம். பொது இடங்களில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும், பொது இடங்களில் எச்சில் துப்புதல் தடை செய்யப்படுகிறது. அனைத்து இடங்களிலும் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும். வீட்டிலிருந்து பணியாற்றுவதை ஊக்கப்படுத்த வேண்டும். 

பரிசோதனை, தடம் கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் ஆகிய வழிகாட்டுதல்களை கை விட்டு விடக்கூடாதுநாட்டில் 2022, ஜனவரி 31ஆம் தேதிவரை பேரிடர் மேலாண்மைச் சட்டம் நடைமுறை யில் இருப்பதால், சட்டத்தை மீறுவோர் மீது பிரிவு 51 60இன் கீழ் நடவடிக்கை எடுக்கலாம். எனத்தெரிவிக்கப் பட்டுள்ளது..

விடுமுறை அறிவிப்பை மீறும்

பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை

சென்னை, டிச.28  இந்த ஆண்டு கரோனா தொற்றுக் காரணமாக பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்ட நிலையில், அரை யாண்டு தேர்வு கள் நடத்தப்படாது என்று கல்வித்துறை அறிவித்தது. அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படாததால், ஒவ்வொரு ஆண்டும் விடப்படும் அரையாண்டு விடுமுறையும் இருக்காது என்று பரவலாக பேசப்பட்டது. இந்தநிலையில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விடுமுறை உண்டு என்று அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பை தொடர்ந்து, கல்வித்துறை சார்பில் ஒரு அறிவிப்பும் வெளியிடப்பட்டது. அதில் 31ஆம்தேதி வரை விடுமுறை விடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கல்வித் துறையின் அறிவிப்பை மீறி சில தனியார் பள்ளிகள் வகுப்புகள் நடத்துவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, மெட்ரிக்குலேசன் பள்ளி கள் இயக்ககம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில், 31ஆம்தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பை மீறும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment