தந்தை பெரியார் மாந்தநேயத்திற்கும், மாந்த உரிமைக் கும், சமூகநீதிக்கும் தடையாக எவை வந்தாலும் எந்த வடிவத்தில் வந்தாலும் எவரால் வந்தாலும் அவற்றை எதிர்த் துக் குரல் கொடுப்பவராகவும், அவற்றை எதிர்ப்போர் எவ ராயினும் ஆதரிப்பவராகவும் திகழ்ந்தார்.. அதனால்தான் அவர் மற்றோரைப் போல் இல்லாமல் மதம், அரசியல், பொருளியல், கலை, வரலாறு, இலக்கியம், மொழி, மக்கள் வாழ்வியல் என அனைத்தையும் சிந்தித்தார்; ஆய்ந்தார்; அவற்றைத் தகர்த்தெறிவதற்கான வழி முறைகளை ஆரய்ந்தார். மக்களுக்குத் தொடர்ந்து அவை குறித்த அறி வுரையையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.
"ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பார் ஆட்ந்தவர் கோள்." குறள்662
என்னும் குறளுக்கேற்பத் தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு இயங்கினார்.
*பெரியார் உயிருடன் வாழ்ந்த மொத்த நாள்கள் 34 ஆயிரத்து 433 என்றும், இந்த நாள்களில், அவர் செய்த மொத்தப் பயண தூரம் 15 லட்சத்து 12 ஆயிரம் கிலோமீட்டர், அவர் சொற்பொழிவாற்றிய மொத்த நேரம் 21 ஆயிரத்து 400 மணி என்றும் அறிகிறோம். இந்தப் பேச்சுகளை ஒலிப்பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5 திங்கள்கள் 11 நாள்கள் வரை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கலாம் என் னும் ஓர் ஆய்வுக்குறிப்பும் பெரியாரின் சமூகம் சார் உணர் வையும் பொறுப்பையும் கடமையையும் கவலையையும் வெளிப்படுத்துவதாகும்.
தந்தை பெரியார் மறைவுக்குப் பின் திராவிடர் கழகமோ பெரியாரியக் கொள்கைகளோ இந்த மண்ணில் இரா என்று கனவு கண்டோர் பலர். அவற்றை வெளிப்படையாகவே கூறித் திரிந்தனர். அவர்களுடைய கயமை நிறைந்த கனவைத் தகர்த்தெறிந்து இன்றளவும் பெரியர் பணியை முடிப்பதையே சூளுரையாகக் கொண்டு இயங்கிவ்ரும் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் 88 ஆண்டு களை முடித்து 89 ஆம் அகவையில் அடியெடுத்து வைக் கின்றார்.
*88 ஆண்டுகள் வாழ்நாளில் 78 ஆண்டுகளைப் பொது வாழ்விற்கு ஒப்படைத்தவர் எவரையும் உலக வரலாற்றில் பார்க்கவியலாது.
*1962 முதல் இன்று வரை 59 ஆண்டுகள் 'விடுதலை' ஆசிரியராகத் தொடர்வது உலக சாதனை. 10.08.1962 நாளிட்ட 'விடுதலை'யில் அவர் ஆசியராகப் பொறுப்பேற்ற போது தந்தை பெரியார் 'வரவேற்கிறேன்' என்னும் தலைப் பில் எழுதிய நெகிழ்ச்சியுரை வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆவணமாகும்.
*1943 அகவை 10 இல் முதல் கழக மேடை! 1944 - அகவை 11இல் முதல் திருமண வாழ்த்துரை! 1945 - அகவை 12 இல் முதல் பொதுக்கூட்டத் தலைமை! 1946 - அகவை 13 இல் கழக மாநாட்டில் முதல் கொடியேற்றம்!
சிறுவன் வீரமணியின் பேச்சால் கவரப்பட்ட அறிஞர் அண்ணா, "இப்போது பேசிய இச்சிறுவன் காதிலே குண் டலம், நெற்றியிலே நீறு, கழுத்திலே உருத்திராட்சம் அணிந்து இப்படிப் பேசியிருந்தால் இவரை இந்தக் கால ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தராக ஆக்கியிருப்பார்கள். இவர் பேசியதிலிருந்து இவர் உண்டதெல்லாம் ஞானப் பாலல்ல. பெரியாரின் பகுத்தறிவுப் பால்" என்று புகழ்ந்தார்.
கருத்தாளராக, சொற்பொழிவாளராக, சமூகநீதிக் காவலராக, சமூகச் சிந்தனையாளராக, வரலாற்றாய்வாளராக, அரசியல் அறிஞராக, பொருளியல் அறிஞராக, இதழியலாராக, தந்தை பெரியார் வழியில் சுயமரியாதைச் சுடராக, வாழ்வி யல் அறிவுரைஞராக இன்று வரையில் எண்ணற்ற மாநாடு கள், பொதுக்கூட்டங்கள், சொற்பொழிவுகள். வாழ்க்கை ஒப்பந்த விழாக்கள், வெளிநாட்டுப் பயணங்கள், பலகலைக் கழகங்கள், கல்லூரிகளில் உரைவீச்சுகள், ஆய்வரங்குகள். அறிவுரைகள், அன்றாட அரசியல் அலசல்கள், நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்த திறனாய்வுகள். கலை நாடக நிகழ்ச்சிகள், தொடர் பயணங்கள் மூலமாக நமக்காக வாழ்ந்துவரும் தமிழர் தலைவர் பெரியாரியலை உலகெங்கிலும் பரப்பும் பேராற்றலாளராக வலம் வந்து கொண்டுள்ளார்,
"நம்மால் முடியாதது வேறு எவராலும் முடியாது: வேறு எவராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்" என்று முழங்கிக் கழகத் தோழர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டி வருகிறார்.
தாம் மேற்கொண்ட கொள்கையில் சிறிதும் தவறாமல், சலுகைகளுக்கு ஆட்படாமல், தம்மை அழித்துவிடத் துடிக் கும் வஞ்சகர்களுக்கு அஞ்சாமல் நடையிடும் ஆசிரியர் அவர்கள் தந்தை பெரியார் 125 ஆவது பிறந்தநாள் 'விடுதலை' மலரில் (2003), "உயிர் பெரிதல்ல' பெரியார் பணி முடிப்போம்"என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டதை எண்ணிப் பார்ப்போம்!
"என்னைப் பொறுத்தவரையில் நான் அதுபற்றி (உயி ருக்குக் குறிவைத்தல்) பயப்படவோ, கவலைப்பட்டவனா கவோ இல்லை. வழக்கம்போல எனது பணிகள் தொடரும் நிலைதான், எனது தற்போதுள்ள வாழ்க்கை போனஸ் வாழ்க்கைதான். 12 ஆண்டுகளுக்கு முன்னால் செய்த அறுவைச் சிகிச்சையால் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
ஏற்கெனவே மம்சாபுரம், சென்னை - வண்ணைநகர், தம்மம்பட்டி(சேலம்) ஆகிய மூன்று ஊர்களில் எனது உயிருக்குக் குறிவைக்கப்பட்டு மீண்டுள்ளேன்.
நோய்வாய்ப்பட்டு இறப்பதைவிட, லட்சியப் பணிக்காக உயிர் போவதே நல்லது என்பதை எனது மரண சாசனமாகப் பல காலம் எண்ணிக் கொண்டிருப்பவன்.
எனது உயிருக்குக் குறி வைத்துவிட்டால் அதில் எதிரிகள் வெற்றி பெற்றுவிட்டால் கூட, ஆயிரங்காலத்துப் பயிரான இந்த இயக்கத்தினை 'சாகாவரம்' பெற்ற இதன் கொள்கைகளை எவராலும் எந்த சக்தியாலும் அழித்து விடவோ, பரவாமல் தடுத்து விடவோ முடியாது.
பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்காது என்று எண்ணி மகிழ்ந்த எதிரிகள், இனி இவர்களை விட்டு வைத்தால் ஆபத்து என்று கருதும் அளவுக்கு வந்துள்ளார் கள் என்றால், அது இயக்கத்தின் வளர்ச்சிக்கு ஒரு நல்ல ஆதாரமாக அமைகிறது என்றுதான் கொள்ள வேண்டும்.
நம் கடன் பெரியார் பணி முடிப்பதே!" என்று கூறியதைக் கண்ணீர் மல்க நினைவுகூர்கின்றேன்
இன்னார்க்கு இன்னது என்னும் சனாதனக் கோட் பாட்டை முறியடித்து, எல்லாமும் எல்லோர்க்கும் என்னும் பெரியாரிய கோட்பாட்டிற்காக அல்லும் பகலும் தந்தை பெரியார் வழியில் நின்று மானுடம் போற்றும் ஆசிரியர் வாழ்க வாழ்க என வாழ்த்திப் பெரியாரியப் பயணம் தொடர உறுதி மேற்கொள்ளுவோம்!
அன்புடன்
முத்து.செல்வன், பெங்களூரு
No comments:
Post a Comment