காவல்துறையில் பணியாற்றும் பெண்ணுக்கு பாலின மாற்றத்துக்கு ம.பி.அரசு அனுமதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 5, 2021

காவல்துறையில் பணியாற்றும் பெண்ணுக்கு பாலின மாற்றத்துக்கு ம.பி.அரசு அனுமதி

புதுடில்லி, டிச.5- மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர், கடந்த 2019 ஆம் ஆண்டு தன்னை ஆணாக மாற்றுவதற்கு அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று, காவல்துறை தலைமையகத்துக்கு மனு அளித்திருந்தார். அந்தப் பெண் காவலரின் நடவ டிக்கைகள் அனைத்துமே, ஆண் காவலர்கள் போன்றே இருப்பதையும், அவர் சிறு வயது முதலே பாலின அடையாள கோளாறு பாதிப்புக்கு ஆளாகி உள்ளதையும் உளவியல் ஆர்வலர்கள் கண்டறிந்து அதனை உறுதி செய்த பின்னர் அவரின் மனுவை மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சகத் திற்கு காவல் தலைமையகம் பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் அந்த பெண் காவலர், ஆணாக மாறும் அறுவை சிகிச்சைக்கு தற்போது அம்மாநில உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் மாற்றுப் பாலின அறுவை சிகிச்சைக்கு அனுமதி வழங்கியது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

நாட்டின் சட்ட விதிகளின்படி, ஒரு இந்தியக் குடிமகன் தனது மதம் மற்றும் ஜாதியை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், தனது பாலினத்தை தேர்வு செய்யும் உரிமை உண்டு என்பதன் அடிப்படையில், இந்த அனுமதியை மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது என்று, அம்மாநில அரசு வட்டாரம் தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment