சென்னை,டிச.5 கர்நாடகாவில் ஒமைக்ரான் தொற்றுகண்டறியப் பட்டதை தொடர்ந்து தமிழ் நாட்டில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், தமிழ்நாடு, கேரளா, கர் நாடகா என 3 மாநில எல்லை பகுதிகளை இணைக்கிறது. தற் போது, கருநாடகாவில் 2பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியா னதைத் தொடர்ந்து கூடலூரில் உள்ள நாடுகாணி சோதனை சாவடியில் காவல் துறையினர் வருவாய் மற்றும் சுகாதாரத் துறை யினர், கண்காணிப்பில் ஈடுபட்டுள் ளனர்.
சோதனைச் சாவடியில் கரு நாடகாவில் இருந்து வரும் கார் களை தடுத்து நிறுத்தி கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. காரில் இருக் கும் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது.
2 தவணை தடுப்பூசி செலுத்தி யுள்ளவர்களை மட்டுமே நீலகிரி மாவட்டத்துக்குள் அனுமதிக்கின் றனர். ஊசி செலுத்தாதவர்களுக்கு அங்கேயே ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. காய்ச் சல், இருமல், சளி அறிகுறி உள்ள வர்களுக்கு கரோனா பரிசோத னையும் செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டு எல்லையில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் ஜூஜூ வாடி சோதனைச் சாவடியிலும், கருநாடகா மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் சோதனைக்குட் படுத்தப்படுகின்றன.
புதுச்சேரி
புதுச்சேரியிலும் முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. இதுபற்றி புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநர் சிறீராமுலு கூறும்போது, வெளி மாநிலங்களில் இருந்து வருவோர் எல்லைப் பகுதியில் பரிசோதிக் கப்படுவார்கள். ஆப்பி ரிக்காவில் இருந்து புதுச்சேரி வந்த 3 பேருக்கு பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்துள்ளது.ஆனாலும் 14 நாட்கள் தனிமைப் படுத்தியுள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment