உலகத் தமிழர்கள் போற்றும் உன்னதத் தலைவர் ஆருயிர் ஆசிரியர் அவர்கள் 89ஆம் ஆண்டு பிறந்தநாள் காணும் நாளில் மகிழ்ந்து உற்சாகமடைகின்றேன்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பத்தாவது அகவையில் அவர் அறிஞர் அண்ணா அவர்களால் “திராவிடர் இயக்கத்தின் திருஞானசம்பந்தர்” எனச் சிறப்பாய் போற்றிப் பாராட்டப்பட்டவர்.
அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் அன்புக் கும் நன் மதிப்பிற்கும் உரிய, அவரின் முழு முதல் அணுக்கத் தொண்டர். அவர்களின் 89ஆம் பிறந்த நாளான சுயமரியாதைத் திருநாளில் பாராட்டி வாழ்த்தி மகிழ்கின்றேன்.
ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் உரிமைக்காகவும், உயர்வுக்காகவும் ஓய்வின்றி உழைத்து வரும் திராவிடர் கழகத் தலைவர் நெடு நாள் வாழ்க வாழ்கவென வாழ்த்துகளுடன் மகிழ்வினை தெரிவித்துக் கொள்கின்றேன்.
- இரா.முல்லைக்கோ
செயலாளர், கருநாடக மாநில திராவிடர் கழகம்
பெங்களூரு.
No comments:
Post a Comment