முத்தமிழ்ச் சுடரே - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 4, 2021

முத்தமிழ்ச் சுடரே

கவிஞர் ஜி.செல்வராஜ், திருவரங்கம்

அய்யாவின் வாழ்வில் பிறந்த இன்நாள் நன்னாளாக

சிகரம் தொட்ட வயதிலும் செந்தமிழ் தாலாட்டட்டும்

கழக கொள்கைக்காக தன் உயிர்மூச்சோடு பாடுபட்ட

தமிழ் உணர்விலே காலத்தின் தத்துவ நெறிகளை

உணர்வு கொண்டு சமுதாயப் பாதையிலே அறியாத

மக்களின் இதயத்திலே வழிமுறையோடு சமூக தீர்வுகளை

நீதியால் போராடி தமிழர்களின் உள்ளங்களை

சிந்தனைச் சுடராக வருங்காலத்தை தட்டி எழுப்பி

கழக திராவிடத்தை வெற்றிப் பாதையாக தமிழா தலைநிமிர்ந்து நில்

என்ற உரிமைக் குரலான எங்கள் திராவிடர் கழகம்

 

ஜாதியை சமத்துவமாக்கி வாழுகின்ற மக்களின்

எண்ணங்களை பூர்த்தி செய்தார். அவரின் உயர்வான எழுத்து

பேனா முனையில் சிந்தும் ஒவ்வொரு துளிகளும்

காலத்தின் கருத்துகளை வருங்கால கல்வெட்டாக

முத்தமிழ் சொற்களை வைரமணிகளாக உதிர்த்து

மக்கள் இதயத்தில் பதிய வைத்தவர்

 

தன்மானம் தைரியம் துணிவு செயல்பாடுகளும்

திராவிட இயக்கத்தை சரித்திரம் சாதிக்கும்

வகையில் புதிய பாதையை உருவாக்கியவர்

அய்யா ஆசிரியர்.கி.வீரமணி அவர்கள் நமக்கெல்லாம்

ஒரு முத்தமிழ் சுடராக விளங்குகிறார்.

 

இந்த 89-ஆவது பிறந்தநாளில் அவர் சுவாசிக்கும்

மூச்சுக்காற்று திராவிட இயக்கத்திற்காகவே

வலம் வந்து பல சாதனைகளை மேற்கொள்ளும்

வல்லமையின் தியாகம் ஒளிவிட்டு பிரகாசிக்கட்டும்.

எங்களுக்கு வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்

No comments:

Post a Comment