பன்னாட்டு நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநராக இந்தியர் நியமனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 4, 2021

பன்னாட்டு நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநராக இந்தியர் நியமனம்

வாசிங்டன், டிச. 4- பன்னாட்டு நாணய நிதியம் அமெரிக்கா வின் வாசிங்டனை தலைமையிடமாக கொண்டு செயல் பட்டு வருகிறது. அய்.எம்.எப். எனப்படும் பன்னாட்டு நாணய நிதியத்தின் தலைமை பொருளியல் வல்லுநகராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கீதா கோபிநாத் செயல்பட்டு வருகிறார். அமெ ரிக்க வாழ் இந்தியரான கீதா கோபிநாத் கருநாடகத்தின் மைசூரில் பிறந்தவர்.

இந்நிலையில், பன்னாட்டு நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநராக கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது, அந்த அமைப்பின் துணை நிர்வாக இயக்குநராக உள்ள ஜெப்ரி ஒஹமொடோவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முடிவடைய உள்ளது. இதனை தொடர்ந்து அந்த பதவிக்கு கீதா கோபிநாத் நியமிக்கப் பட்டுள்ளார்.

தற்போது, பன்னாட்டு நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநராக கிறிஸ்டலினா ஜார்ஜிவா செயல்பட்டு வரும் நிலையில் துணை நிர்வாக இயக்குநராக கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், பன்னாட்டு நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் துணை நிர்வாக இயக்குநர் ஆகிய இரு உயர்பதவிகளிலும் பெண்கள் பணியாற்றுவது இதுவே முதல்முறையாகும்.

வியட்நாமில் வெள்ளம், நிலச்சரிவு;

18 பேரைக் காணவில்லை

ஹனோய், டிச. 4- வியட்நாம் நாட்டின் மத்திய பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி அந்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைகள் முழுவதும் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.  வீடுகள் முற்றிலும் அழிந்து போயுள்ளன.

இதேபோன்று தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளூர் சாலைகள் பகுதியளவு பாதிப்படைந்து உள்ளன.  போக்கு வரத்து தடை செய்யப்பட்டுள்ளது.  வெள்ளம் பாதித்த பகுதியிலிருந்து மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த வெள்ளத்தில் 18 பேர் மாயமாகி உள்ளனர். இவர் களில் பலர் இறந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

இதுவரை பெய்துள்ள மழையில் 780 எக்டர் பரப்பள விலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.  எனினும் காபி தோட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி எதுவும் வெளியிடப்படவில்லை.

கடந்த ஆண்டு புயலால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 378 பேர் பலியானார்கள்.

No comments:

Post a Comment