சென்னை, டிச. 4- அறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி கைதி களை விடுதலை செய்யும் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூடுதலாக சில தளர்வுகளை அறிவிக்க உள்ளதால், மேலும் அதிகமானோர் விடுதலை செய்யப்படு வர் என மாநில சட்டத்துறை அமைச்சர்எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் ரூ.37லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய ரத்தம் சேகரிப்பதற்கான வாகனச் சேவை தொடக்க விழா நேற்று (3.12.2021) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்து கொண்டு ரத்தம் சேகரிப்ப தற்கான வாகனச் சேவையை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள 7 பேர்விடுதலை விவகாரத்தில், எதிர்க்கட்சித் தலை வர் பழனிசாமி கூறுவதுபோல திமுக அரசு நாடகமாட வில்லை. நாடகமாடவேண்டிய அவசியமும் இல்லை.
7 பேரையும் சட்டத்துக்கு உட்பட்டு விடுதலை செய்வ தற்கான நடவடிக்கையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஈடு பட்டுள்ளார். இது தொடர்பாக எந்த வகையான நடவடிக்கை கள் எடுக்கப்படும் என்பதை வெளியே கூற இயலாது.
அறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி நீண்டகாலம் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 700 கைதிகள் விதிமுறைக ளுக்குட்பட்டு விடுதலை செய்யப்படுவர் என அறிவிக்கப் பட்டிருந்தது. இதில், கூடுதலாக சில தளர்வுகளை தமிழ்நாடு முதலமைச்சர் விரைவில் அறிவிக்க உள்ளார். இதனால் மேலும் அதிகமானோர் விடுதலை செய்யப்படுவர் என்றார்.
தனியார்மயத்துக்கு எதிர்ப்பு வங்கிகள் இரு நாட்கள்
வேலை நிறுத்தம் அறிவிப்பு
புதுடில்லி, டிச. 4- வங்கிகள் தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் திட்டத்தைக் கண்டித்து இந்த மாதம் 16 மற்றும் 17-ம் தேதி இரு நாட்கள் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக வங்கி யூனியன் அமைப்பான யுஎப்பியு தெரிவித்துள்ளது.
2021-2022ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போது ஒன்றிய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில் “நடப்பு நிதியாண்டில் இருபொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக் கப்படும்” எனத் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வங்கி யூனியன்கள் இருநாட்கள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் (ஏஅய்பிஓசி) பொதுச்செயலாளர் சஞ்சய் தாஸ் கூறுகையில் “வங்கிகள் தனியார்மயமாக்கத்தை ஒன்றிய அரசு கைவிடா விட்டால், டிசம்பர் 16 மற்றும் 17ஆம் தேதி வேலைநிறுத்தம் நடத்தப்படும். தொடர்ந்து போராட்டங்கள், தர்ணாக்கள் நடத்தப்படும்.
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதன் மூலம் பொருளாதாரத்தில் முன்னுரிமைத் துறைகளைப் பாதிக்கும், கிராமப்புறப் பொருளாதாரத்தில் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வழங்குவதும் பாதிக்கும்.
ஒன்றிய அரசின் இந்த திட்டம் முழுமையாக அரசியல் நோக்கம் சார்ந்த முடிவாகும். வங்கிகளை பெரிய முதலாளி கள் வசம் கொடுக்க அரசு விரும்புகிறது. நாட்டின் ஒட்டு மொத்த டெபாட்டுகளில் 70 சதவீதம் பொதுத்துறை வங்கி களில்தான் இருக்கிறது. இந்தவங்கிகளை தனியாரிடம் வழங்கும்போது, சாமானிய மக்கள் டெபாசிட் செய்துள்ள பணம் ஆபத்தில் முடியும்” எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment