கரோனா காலத்தில் பணியாற்றிய சுகாதார பணியாளர்களுக்கு முன்னுரிமை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 4, 2021

கரோனா காலத்தில் பணியாற்றிய சுகாதார பணியாளர்களுக்கு முன்னுரிமை

 அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, டிச. 4- கரோனா காலத்தில் அவுட்சோர் சிங் முறையில் பணியாற்றி யவர்களுக்கு நடைபெற வுள்ள சுகாதாரப் பணி யாளர்கள், ஆய்வாளர் கள் தேர்வில் கூடுதல் மதிப் பெண் அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக் கையில், “பொதுமக்க ளுக்கு சுகாதார சேவை களை மேலும் மேம்படுத் தும் வகையில் இந்த அரசு வெளியிட்டுள்ள மருத்து வம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத் துறை அரசாணை எண்:516 நாள்:19.11.2021 படி 2448 பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் கள் (ஆண்)/ சுகாதார ஆய்வாளர்கள் (Gr-II) 2448 துணை சுகாதார - நலவாழ்வு மய்யங்களிலும் மற்றும் மருத்துவம் () நல்வாழ்வுத் துறை அர சாணை எண்:392 நாள்: 30.08.2021, மருத்துவம் () நல்வாழ்வுத் துறை அரசாணை எண்:483 நாள்: 1.11.2021 படி 4848 இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் துணை சுகாதார  நலவாழ்வு மய் யத்திற்கு ஒருவர் என்ற விகிதத்தில் ஒப்பந்த முறையில் பணியமர்த்த ஆணை பிறப்பித்துள்ளது.

இவ் அரசாணைகளில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளின் அடிப்படை யில் பல்நோக்கு சுகாதா ரப் பணியாளர்கள் (ஆண்) / சுகாதார ஆய்வாளர்கள் (Gr-II) மற்றும் இடை நிலை சுகாதாரப் பணி யாளர்கள் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் செயல்படும் மாவட்ட சுகாதார சங்கங் கள் மூலமாக தேர்வு செய் யப்பட்டு பணியமர்த்தப் படுவார்கள்.

இதற்கான அறிவிப்பு செய்திதாள்களிலும் தேசிய நலவாழ்வு குழுமம் மற்றும் மாவட்ட நல வாழ்வு குழுமம் வலை தளங்களில் வெளியிடப் பட்டுள்ளது.

வரையறுக்கப்பட்ட தகுதி அடிப்படை மற்றும் முற்றிலும் வெளிப்படை யான முறையில் பணிய மர்த்தப்பட தேவையான வழிகாட்டு நெறிகள் மருத்துவம் () நல்வாழ் வுத் துறை அரசாணை எண்:531 நாள்:25.11.2021-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

கரோனா தொற்று காலத்தில் வெளியாதார முறையில் (அவுட்சோர் ஸிங் முறை) பணிபுரிந்த சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் செவிலியர்களின் அரிய பணியினை கருத் தில் கொண்டு மாவட்ட சங்கங்களின் வாயிலாக தேர்வு நடைபெறும் போது, கரோனா பெருந்தொற்று காலத்தில் இவர்கள் பணிபுரிந்தமைக்கான முன்னுரிமை அளிக்கப் பட்டு கூடுதல் மதிப்பெண் கள் வழங்குவதற்கு வழி செய்யப்பட்டுள்ளது.

கரோனா பெருந் தொற்று காலத்தில் சிறப் பாக பணியாற்றிய செவிலியர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் இந்த நல்லதொரு வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப் பிக்கவும்என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment