ராகுல்காந்தி
புதுடில்லி, டிச. 29- சீன நாட்டுடனான எல்லை பிரச்சினைக்காக மோடி பிரதமர் பதவியிலிருந்து விலகவேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தொண்டர்கள் கட்சியின் கொள்கைகளை அடித்தட்டு மக்கள் வரை கொண்டு சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காணொலிக் கலந்துரையாடல் மூலம் உரையாற்றினார்.
ராகுல் காந்தி தனது உரையில்” சீன அரசு இந்தியப் பகுதியில் உள்ள நிலங்களை மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, ஆக்கிரமிப்பு செய்திருந்தால், அவர் அப்போதே பதவி விலகியிருப்பார். அதைப் போல் மோடியும் அதற்குப் பொறுப்பேற்று தனது பிரதமர் பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடியோ இதுவரை இந்த விஷயத்தில் இன்னும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்காமல் இருக்கிறார். நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள் உள்ள போது ஆர்எஸ்எஸ் அமைப்பு வெறுப்பைப் பரப்பி வருகிறது. அதற்கு நாம் அன்பின் வழியில் எதிர்வினை ஆற்ற வேண்டும்” எனக் கூறி உள்ளார்.
புகாரைக் கவனிக்காத அதிகாரிகளின் ஊதியத்தை நிறுத்திவைத்து தனது ஊதியத்தையும் வாங்க மறுத்த ஆட்சியர்
போபால், டிச. 29- மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்ட ஆட்சியர் மக்கள் புகாரைக் கவனிக்காத அரசு அதிகாரி களின் ஊதியத்தை நிறுத்தியதுடன் தனது ஊதியத்தையும் வாங்க மறுத்துள்ளார்.
மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஜபல்பூர் மாவட்ட ஆட்சி யராக இருப்பவர் கரம்வீர் சர்மா. கடந்த திங்கள்கிழமை மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத் தின்போது, முதலமைச்சரின் ஹெல்ப்லைனில் நிலுவையில் உள்ள புகார்கள் குறித்து துறை வாரியாக கரம்வீர் சர்மா ஆய்வு செய்தார். ஆய்வில் ஏராளமான புகார்களுக்குத் தீர்வு காண்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப் பட்டது.
இதையொட்டி கடும் கோபம் அடைந்த கரம்வீர் சர்மா, டிசம்பர் மாதத்திற்கான தனது சொந்த ஊதியம் மற்றும் சில உயரதிகாரிகளின் ஊதியத்தை நிறுத்தி வைக்க உத்தர விட்டுள்ளார். அதாவது மாவட்ட கருவூல அதிகாரிக்குத் தனது சொந்த ஊதியம் உள்ளிட்ட உயரதிகாரிகள் அனை வருக்கும் சம்பளத்தை நிறுத்தி வைக்கவும், இதனை அனைத்துத் துறைகளிலும் செயல்படுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார். சுமார் 100 நாட்களுக்கு மேல் நிலு வையில் உள்ள புகார்களுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படு வதாக ஆட்சியர் கூறியுள்ளார். துணை நகராட்சி ஆணை யர்கள் நகரங்களில் தூய்மை தொடர்பான ஹெல்ப்லைன் தொடர்பான விஷயங்களைக் கையாள்வதில் அலட்சியமாக இருந்ததற்காக அவர்கள் ஊதியத்தையும் நிறுத்தி வைக் கவும் சர்மா உத்தரவிட்டுள்ளார்.
தவிர இதே நடவடிக்கைகளை வருவாய்த்துறை, பொதுப்பணித்துறைக்கும் ஆட்சியர் எடுத்துள்ளார். ஆட்சி யரின் நடவடிக்கைக்கு மக்கள் பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment