சென்னை, ஜன.25 மாரத்தானில் 100 நாள்களில் 1000 கி.மீ. தூரம் ஓடுவது என்ற இலக்கை 92 நாட்களில் எட்டி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் சாதனை படைத்தார்.
தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடுமையான பணிச்சுமைகளுக்கும் மத்தியிலும் உடல்நலத்தில் தனி கவனம் செலுத்துபவர். பல்வேறு நாடுகளில் நடந்துள்ள மாரத்தான் ஓட்டங்களிலும் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். அந்தவகையில் பிறர் மீது அக்கறை செலுத்தும் தேசிய தினமான கடந்த ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி கூடுமானவரை அனைவர் மீதும் அக்கறை செலுத்தவேண்டும் என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாரத்தான் ஓட்டம் தொடங்கினார். இதில் 100 நாட்களில் 1,000 கி.மீ. தூரம் ஓடுவது என்பது அவர் இலக்காகும். பல்வேறு பணிகளுக்கு இடையேயும் அவர் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்று ஓடிவந்தார். இந்தநிலையில் மாரத்தான் தொடங்கி 92ஆவது நாளில் (நேற்று) அவர் 1,009.86 கி.மீ. ஓட்டத்தை நிறைவு செய்தார். இதன் மூலம் 100 நாட்களில் ஓடவேண்டிய இலக்கை 92 நாளிலேயே எட்டி அவர் சாதனை படைத்துள்ளார்.
No comments:
Post a Comment