இறுதியாண்டு தவிர மற்ற உயர்கல்வி பயிலும் 20 லட்சம் மாணவர்களுக்கு இணைய வழி தேர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 25, 2022

இறுதியாண்டு தவிர மற்ற உயர்கல்வி பயிலும் 20 லட்சம் மாணவர்களுக்கு இணைய வழி தேர்வு

அமைச்சர் .பொன்முடி தகவல்

சென்னை, ஜன.25  கலை மற்றும் அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக் படிக்கும் 20 லட்சம் மாணவர்களுக்கு இணைய வழியில் தேர்வு நடைபெறும். இதில் இறுதியாண்டு மாணவர்களுக்கு இணைய வழி தேர்வு இல்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் .பொன்முடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

பாலிடெக்னிக் 1, 3, 5ஆவது செமஸ்டர், பொறியியல் 3, 5, 7 ஆவது செமஸ்டர் மற்றும் பட்டப்படிப்பு இளநிலை தேர்வுகளில் 1, 3, 5ஆவது செமஸ்டர்களுக்கு இணைய வழியிலும், மேலும் முதுகலை பட்டப்படிப்பு களுக்கு 1 மற்றும் 3ஆவது செமஸ்டர் தேர்வுகளும் இணையவழியிலும் நடத்தப்படும். இறுதி ஆண்டில் இறுதி செமஸ்டர் பயிலும் மாணவர்களுக்கு, அதாவது இளநிலை மாணவர்களுக்கு 6ஆவது செமஸ்டர் மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு 4ஆவது செமஸ்டர் தேர்வுகள் நேரடித் தேர்வுகளாக நடைபெறும்.

பொறியியல் மாணவர்களுக்கு 8ஆவது செமஸ்டர் நேரடி தேர்வாக நடைபெறும். எம்., எம்.எஸ்சி முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு 1 மற்றும் 3ஆவது செமஸ்டர் தேர்வுகள் மற்றும் எம். 3ஆவது செமஸ்டர் தேர்வுகள் இணையவழியில் நடைபெறும். இறுதி செமஸ்டர் தேர்வுகள் அதாஆவது 4ஆவது செம்ஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும். மேலும் அரியர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும். அதன்படி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 12, 94, 051 மாணவர்களுக்கும், பல்கலைக்கழகங்களில் 52,301 மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் 4,57,196 மாணவர்களுக்கும் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,97,327 மாணவர்களுக்கும் என மொத்தம் 20 லட்சத்து 875 மாணவர்களுக்கு இணைய வழியில் தேர்வு நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கரோனா பரவல்: தமிழ்நாட்டில்  நடைபெறவிருந்த

கிராம சபைக் கூட்டம் ரத்து...!

சென்னை, ஜன.25 கரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் குடியரசு தினத்தன்று நடைபெறவிருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

நாட்டின் 73ஆவது குடியரசு தினம் நாளை (26.1.2022) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. தொற்று பரவல் தினம் தினம் காட்டுத்தீ போல அதிகரித்து வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் குடியரசு தினத்தன்று நடைபெறவிருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தக்கூடாது என பஞ்சாயத்துக்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment