காபூல், ஜன. 25- தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில் தற்போது கடும் பஞ்சம் ஏற்பட்டு உள்ளது. உணவுப் பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் மக்கள் பசியும், பட்டினியுமாக இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் உதவினாலும் ஆப்கானிஸ்தானின் உணவுப்பற்றாக் குறையை இன்னமும் தீர்க்க இயலவில்லை. லட்சக் கணக்கான குழந்தைகள் ஊட்டச்சத்து இன்மையால் பாதிக்கப்பட்ட்டுள்ளனர்.
கடும் பஞ்சத்தால் ஆப்கானிஸ்தான் தத்தளிக்கும் நிலையில், தங்களுக்கு உதவுமாறு நார்வே நாட்டிடம் தலீபான் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் கள். இதற்காக ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் தலைமையில் குழு ஒன்று நார்வே சென்று உள்ளது. தலீபான்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆட்சியை கைப்பற்றிய பிறகு இதுபோன்ற பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.
மெக்சிகோவில் கொடூரம் - மீண்டும்
ஒரு பத்திரிகையாளர் சுட்டுக் கொலை
மெக்சிகோ சிட்டி, ஜன. 25- மெக்சிகோ நாட்டின் டிஜூவானா வில் பத்திரிகையாளராக வேலை பார்த்து வந்தவர் லூர்து மால்டனோடா லோபஸ் என்ற பத்திரிகையாளர்
இந்நிலையில், தனது வாகனத்தில் சென்ற லூர்து மால்டனோடா மீது சில நாள்கள் துப்பாக்கியால் சரமாரி யாக சுட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
கடந்த ஒரு வார காலத்தில் பத்திரிகையாளர்கள் மீது நடைபெற்ற இரண்டாவது தாக்குதல் இதுவாகும். சில தினங்களுக்கு முன் மார்க்ரிடோ மார்டினஸ் என்ற பத்திரி கையாளர் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
2021ஆம் ஆண்டில் மட்டும் 7 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2000 ஆண்டு முதல் தற்போதுவரை 100க்கு மேற்பட்ட பத்திரிகையாளர் கள் கொல்லப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment