அய்ரோப்பாவில் முடிவுக்கு வரும் கரோனா பெருந்தொற்று உலக சுகாதார அமைப்பு தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 25, 2022

அய்ரோப்பாவில் முடிவுக்கு வரும் கரோனா பெருந்தொற்று உலக சுகாதார அமைப்பு தகவல்

ஜெனீவா, ஜன. 25- அய்ரோப் பாவில் கரோனா பெருந் தொற்று முடிவை நெருங் கும் தருவாயில் இருப்ப தாக அய்ரோப்பாவுக்கான உலக சுகாதார அமைப் பின் இயக்குநர் ஹான்ஸ் க்ளூக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹான்ஸ் க்ளூக் கூறியதாவது:

அய்ரோப்பாவில் கரோனா பெருந்தொற்று முடிவை நோக்கி செல் கிறது. மார்ச் மாதத்திற் குள் அய்ரோப்பாவில் 60% பேரை ஒமைக்ரான் தொற்றிவிடும். அதன் பின் ஒமைக்ரான் அலை குறைந்தவுடன் உலகள வில் சில காலம் அமைதி நிலவும்.

அதற்கு காரணம் தடுப் பூசி ஆற்றலாக இருக்க லாம் அல்லது மக்களுக்கு உருவான மந்தை நோய் தடுப்பாற்றலாக இருக் கலாம். அதன் பின்னர் கரோனா தாக்கம் குறை யும். இந்த ஆண்டு கடைசி வரை வேறு எந்த வகை தொற்று பாதிப்பும் இருக் காது. அய்ரோப்பாவுக் கான உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஹான்ஸ் க்ளூக்

ஒரு பெருந்தொற்று உள்ளூர் அளவு தொற்று நிலைக்கு வருகிறது என்றால் அந்த நோயின் போக்கை நாம் கணித்து முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பதே அர்த்தம்.

ஜனவரி 18-ம் தேதி கணக்கின்படி அய்ரோப் பியாவில் பதிவான புதிய தொற்றுகளில் 15 சதவீத தொற்று ஒமைக்ரான் வைரசால் ஏற்பட்டவை. தொற்றின் வேகம் அதிக மாக இருப்பதால், அர சாங்கங்கள் தொற்றுப் பரவல் தடுப்பில் தீவிரம் காட்டுவது போல மருத் துவமனை தேவைகளை குறைப்பது, பள்ளிகள் செயல்பாடுகள் தடைபடு வதைக் சீர் செய்வது, பொருளாதாரத்தை மேம்படுத்துவது, சீக்கிரம் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய மக்களை பாது காப்பது ஆகியனவற்றில் கவனம் செலுத்த வேண் டும். இவ்வாறு ஹான்ஸ் க்ளூக் கூறினார்.

No comments:

Post a Comment