காபூல், ஜன. 25- ஆப்கானிஸ் தான் நாட்டின் ஆப்கா னிஸ்தான் இஸ்லாமிய அமீரகம் (அய்இஏ) மாநி லத்தின் பேரிடர் மேலாண்மை அமைச்ச கம் ஆப்கானிஸ்தானின் 15 மாகாணங்களில் ஏற் பட்ட கடும் பனிப்பொழி வின் காரணமாக 42 பேர் உயிரிழந்துள்ளதாக தெரி வித்துள்ளது. மேலும் 76 பேர் காய மடைந்துள்ள தாகவும் கடந்த 20 நாட் களில் 2000-க்கும் மேற் பட்ட வீடுகள் சேதம டைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கூறிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள், பாதிக்கப் பட்ட மக்களுக்கு அவசர உதவி வழங்கப்பட்டு வரு கிறது. பேரிடர்களை தடுக் கும் வகையில் அதிகாரி கள் கடுமையாக உழைத்து வருவதாக கூறினர். பனிப் பொழிவினால் நெடுஞ்சாலைகளில் மாட்டிக் கொண்டுள்ள நூற்றுக் கணக்கான மக்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதா கவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரத்தில் மேற்கு பத்கிஸ் மாகாணத் தில் 2 நிலநடுக்கங்கள் ஏற் பட்டு 28 பேர் உயிரிழந் தனர். 1000-க்கும் மேற் பட்ட வீடுகள் சேதம டைந்தன. இந்த நிலையில் தற்போது உறைய வைக் கும் குளிர் மற்றும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வேலையின்மை, பசி, பட்டினி மற்றும் வறட்சி ஆகியவற்றை ஏற்படுத்தி மனிதாபிமான நெருக் கடியை கொடுத்து வரு கிறது.
No comments:
Post a Comment