சோவியத் குடியரசு போல சீனா சிதறும் ஆபத்து சீன வெளியுறவுத் துறை எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 25, 2022

சோவியத் குடியரசு போல சீனா சிதறும் ஆபத்து சீன வெளியுறவுத் துறை எச்சரிக்கை

பீஜிங், ஜன. 25- ''தேசிய பாதுகாப்பு என்ற பெய ரில் அளவிற்கு அதிகமாக ராணுவத்திற்கு செலவு செய்தால் சோவியத் குடியரசு போல சீனாவும் சிதறும்'' என சீன வெளி யுறவு கொள்கை ஆலோ சகரான ஜியா குய்ங்குவா எச்சரித்துள்ளார்.

சீனாவின் சி.பி.பி.சி.சி. எனப்படும் அரசியல் ஆலோசனை உயர் மட் டக் கமிட்டி தலைவரான ஜியா குய்ங்குவா பன் னாட்டு பாதுகாப்பு ஆய்வு இதழில் கட்டுரை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு உள்ள தாவது: சோவியத் குடி யரசு தேச பாதுகாப்புக் காக அளவிற்கு அதிகமாக ராணுவத்திற்கு செலவு செய்தது. அதனால் பொருளாதார வளர்ச்சி யில் பின் தங்க நேர்ந்தது.

மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறவில்லை. அதனால் சோவியத் அரசு மக்களின் செல் வாக்கை இழந்து தனித் தனி நாடுகளாக 1991இல் சிதறியது. கம்யூனிஸ்ட் நாடான சோவியத் குடிய ரசின் வீழ்ச்சி சீன பள்ளி களில் மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட் டது. இதே நடை முறையை தற்போது சீனா பின்பற்றி வருகிறது. தேசப் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்து கண்ணை மூடிக் கொண்டு ராணுவ பலத்தை அதிகரித்து வரு வதால் செலவினங்கள் உயர்ந்து வருகின்றன.

இது விலைவாசி உயர் வுக்கு வழி வகுத்து மக்க ளுக்கு கிடைக்க வேண் டிய பயன்களுக்கு தடைக் கல்லாக அமைந்து விடும். இதன் தாக்கம் சோவியத் குடியரசு போல சீனா சிதற வழி வகுத்து விடும் ஆபத்து உள்ளது. இவ் வாறு கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment