80 அடி பள்ளத்தில் சைக்கிளோடு விழுந்த பெண் உயிர் பிழைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 25, 2022

80 அடி பள்ளத்தில் சைக்கிளோடு விழுந்த பெண் உயிர் பிழைத்தார்

ஐக்பர்த், ஜன. 25-- இங்கிலாந் தின் லிவர்பூலின் புற நகர்ப் பகுதி ஐக்பர்த்தை சேர்ந்தவர் காரா சுட் டன் (26). இவர் தனது காதலன் ஜேம்சுடன் (25)  விடுமுறையை கொண் டாட கடந்த 5 மாதங்க ளூக்கு முன்  சைக்கிளில் நார்த் வேல்ஸில் உள்ள

கோட்-ஒய்-ப்ரெனின் என்ற இடத்தில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு சென்றார்.

அங்கு மலை உச்சியின் ஓரத்தில் நின்று அழகை ரசிக்கும்  போது   நிலை தடுமாறி அவர்  மலை உச் சியில் இருந்து சைக்கி ளோடு கீழே விழுந்தார்.  காரா நல்வாய்ப்பாக தலையில் அணிந்திருந்த தலைக்கவசத்தை கழட் டாத காரணத்தால் பெரும் விபத்திலிருந்து உயிர் தப்பினார் .

எலும்பு முறிவு, இடுப்பு எலும்பு முறிவு, ஆகியவற்றால் பாதிக்கப் பட்டிருந்தாலும்  உயிர் பிழைத்தார்.

ராயல் ஸ்டோக் பல் கலைக்கழக மருத்துவ மனைக்கு உரிய நேரத் திற்கு கொண்டு சென்ற தால் அய்ந்து மாதத்தில் மருத்துவர்களின் உதவியினால் மீண்டு வந்து உள்ளார்  காரா என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment