மின் வாகன துறையில் "மியூச்சுவல் பண்ட்கள்" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 25, 2022

மின் வாகன துறையில் "மியூச்சுவல் பண்ட்கள்"

மும்பை, ஜன. 25- வளர்ச்சி வாய்ப்புள்ளதாக கருதப் படும் மின் வாகனத் துறையை மய்யமாக கொண்டு, புதிய நிதிகளை மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் அறிமுகம் செய்ய துவங்கியுள்ளன.

மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் பல்வேறு பிரிவுகளில் புதிய நிதி களை அறிமுகம் செய்து வரும் நிலையில், அண்மை காலத்தில் மின் வாகன வளர்ச்சியை மய்யமாக கொண்டு நிதிகளை அறி முகம் செய்வதில் ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளன. பல்வேறு துறைகளில் குறிப்பிட்ட கருப்பொருள் சார்ந்து முதலீடுகளை மேற்கொள்ளும் நிதிகள், ‘திமெட்டிக் பண்ட்ஸ்என அறியப்படுகின்றன.

புதிய போக்கு அல்லது வளர்ச்சி வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வ தற்கான உத்தியாக இது அமைகிறது. இந்த வகை யில் தற்போது மின் வாகன துறையில் மியூச்சுவல் பண்ட்கள் ஆர்வம் காட் டத் துவங்கி உள்ளன. அண்மையில், மூன்று மியூச்சுவல் பண்ட் நிறு வனங்கள் மின் வாகன நிதிகளை அறிமுகம் செய்ய அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப் பாட்டு அமைப்பான செபியிடம் விண்ணப்பித் துள்ளன.

வாகன துறையில் மின் வாகனங்கள் கவ னத்தை ஈர்க்கத் துவங்கி யுள்ளன. சுற்றுச்சூழலுக்கு நட்பான தன்மை காரண மாக, மின் வாகனங்கள் பெட்ரோல், டீசல் வாக னங்களுக்கு மாற்றாக கருதப்படுகின்றன. மேலும்  மின் வாகனங்கள் செயல் திறனும் அதிகரித்து வரு வதால், பலரும் மின் வாகனங்களை நாடத் துவங்கியுள்ளனர்.

அமெரிக்கா, அய்ரோப் பிய நாடுகளைப் போலவே தற்போது இந்தியாவிலும் மின் வாகனங்கள் வர வேற்பை பெறத் துவங்கி யுள்ளன. புதிய நிறுவனங் கள் மின் வாகன தயாரிப் பில் ஈடுபட்டு வருவ தோடு, பாரம்பரிய வாகன தயாரிப்பு நிறுவனங்களும் மின் வாகன உற்பத்தியில் கவனம் செலுத்த துவங் கியுள்ளன.

இந்நிலையில் மின் வாகன துறையின் வளர்ச்சி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், மியூச்சுவல் பண்ட் நிறுவ னங்கள் மின் வாகன நிதி திட்டங்களை அறிமுகம் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றன.மின் வாகன நிதிகள் புதுயுக மின் வாகன நிறுவனங் களில் முதலீடு செய்வ தோடு, இந்த பிரிவில் உற்பத்தியில் ஈடுபடும் பாரம்பரிய கார் தயாரிப்பு நிறுவனங்களிலும் ஈடு படும் என எதிர்பார்க் கப்படுகிறது.

மேலும், மின் வாக னங்களுக்கானபேட்டரிதயாரிப்பு, ‘செமிகண்டக் டர்தயாரிப்பு போன்ற துணை பொருட்கள் நிறு வனங்களிலும் முதலீடு செய்ய உள்ளன.

மின் வாகன துறையில் தொழில்நுட்ப முன்னேற் றமும் வேகமாக ஏற்பட்டு வருகிறது. அதே நேரத் தில் நுகர்வோரும் மின் வாகனங்களுக்கு மாறு வதில் ஆர்வம் காட்டு கின்றனர்.

இந்திய நுகர்வோரி டம் பெரும்பான்மையி னர் மின் வாகனங்களுக்கு கூடுதலாக விலை கொடுக்க தயாராக இருப்பதாக அண்மை ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

எனவே, இந்த துறை யில் நீண்ட கால வளர்ச்சி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கருதப்படு கிறது. வளர்ச்சி வாய்ப் பின் அம்சங்கள் இப்போதே வலுவாக காணப்படுவதா கவும் வல்லுனர்கள் தெரி விக்கின்றனர். காலநிலை மாற்றம் தொடர்பான பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு அதிக ரித்து வரும் நிலையில், மின் வாகனங்களுக்கான தேவையும், ஆதரவும் அதிகரிக்கும் என்றும் கருதப்படுகிறது.

இந்த பின்னணியில், மின் வாகன நிதிகள் ஈர்ப்புடைய வாய்ப்பாக தோன்றினாலும், முத லீட்டாளர்கள் இவற்றில் முதலீடு செய்யும் முன், இந்த நிதிகளின் தன் மையை நன்றாக ஆய்வு செய்ய வேண்டும் என் கின்றனர் .மின் வாகன நிதிகளில் ஆர்வம் கொண் டுள்ளவர்கள், அவற் றுக்கு அடிப்படையாக அமையும் குறியீடு அல் லது .டி.எப்., அமைப்பை பரிசீலிப்பது அவசியம்.

மின் வாகன துறையை கவனித்து வருபவர்கள் மற்றும் இத்துறை போக்குகளில் பரிட்சயம் உள்ளவர்கள், சிறிய அளவில் இந்த நிதிகளில் முதலீட்டை துவங்கலாம் என்கின்றனர். மற்ற முத லீட்டாளர்கள் மின் வாகன துறையின் செயல் பாட்டை நெருங்கி கவ னித்து, அதற்கேற்ப முடிவு எடுப்பது பொருத்தமாக இருக்கும்.


No comments:

Post a Comment