நியூயார்க், ஜன. 25- மனித மூளையில் சிறிய 'சிப்' எனப்படும் சாதனத்தை பொருத்தி, இயந்திரங்கள் வாயிலாக அதைக் கட்டுப்படுத்தும் முறைக்கான மருத்துவப் பரிசோத னையை விரைவில் துவக்க, பிரபல தொழிலதிபர் எலான் மஸ்கின் 'நியூராலிங்க்' நிறுவனம் தயாராகி வருகிறது.
உலகின் மிகப் பெரும் பணக் காரர்களில் ஒருவரான அமெரிக் காவைச் சேர்ந்த எலான் மஸ்க், பல புதுமையான தொழில்நுட்பங் களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் உள்ளவர். விண்வெளிக்கு சுற்றுலா பயணம், தானாக இயங் கும் கார் என பல புதுமையான கண்டுபிடிப்புகளை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.
மனித மூளையை இயந்திரங்க ளுடன் இணைக்கும் தொழில்நுட் பத்தை ஆராய்வதற்காக அமைக்கப் பட்டுள்ள நியூராலிங்க் என்ற நிறு வனத்தில், மிகப் பெரிய முதலீட்டை எலான் மஸ்க் செய்துள்ளார். இந்த தொழில்நுட்பம்வாயிலாக மனித மூளையில் ஒரு சிறிய சிப் பொருத்தப்படும்.
அதை கணினி, அலைபேசி போன்ற சாதனங்களுடன் இணைக்கலாம். இந்த சாதனங் களை கையால் தொடாமலேயே நினைவுகள் வாயிலாக இயக்க முடியும். மேலும், மனித மூளை நினைப்பதை இந்த சாதனங்களில் பதிவு செய்ய முடியும்.மூளையில் ஏற்படும் பாதிப்புகளை இந்த சிப் உதவியால் சரி செய்ய முடியும் என கூறப்படுகிறது.
கடந்த 2017இல் இந்த ஆய்வு குறித்து எலான் மஸ்க் அறிவித்தார். அந்த நிறுவனம், பன்றிகள் மற்றும் குரங்குகளில் பரிசோதனை செய் துள்ளது. தற்போது மனிதர்கள் மூளையில் சிப்களை பொருத்துவ தற்கான ஆராய்ச்சிகளை துவக்க திட்டமிட்டுள்ளது.
இதற்காக மருத்துவ நிபுணர் களை பணியில் அமர்த்த இந்த நிறு வனம் விளம்பரம் செய்துள்ளது. விரைவில் அனுமதிபெற்று மருத்து வப் பரிசோதனைகள் துவங்கப் படலாம் என எதிர்பார்க்கப்படு கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
No comments:
Post a Comment