வாசிங்டன், ஜன. 25- விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் முகக்கவ சம் அணிய மறுத்ததால் மியாமியிலிருந்து லண்டன் புறப்பட்ட அமெரிக்க ஜெட்லைனர் விமானம் அவசரமாக மியாமிக்கே திருப்பி அனுப்பப்பட்டது .
129 பயணிகள் மற்றும் 14 ஊழி யர்களுடன் போயிங் 777 விமானம் ஒன்று மியாமர் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்டு சென்றது.விமானம் நடுவானில் பறந்த போது ஒருவர் மட்டும் முகக் கவசம் அணியவில்லை. விமான ஊழியர்கள் கேட்டுக்கொண்டும் அவர் கேட்கவில்லை. இதனால் வேறுவழியின்றி விமானி விமா னத்தை மீண்டும் மியாமிக்கே திருப்பினார்.
விமானம் மியாமியில் தரையி றங்கியதும் அனைத்து பயணிகளை யும் காவலர்கள் பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.
முகக்கவசம் அணிய மறுத்த நபரை தடை செய்யப்பட்ட பயணி கள் பட்டியலில் சேர்த்துள்ளதாக அமெரிக்க விமான நிறுவனம் தெரி வித்துள்ளது.
No comments:
Post a Comment