11 வயது சிறுவன் பலியான விவகாரம்: நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மய்யம் இனி செயல்படாது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 26, 2022

11 வயது சிறுவன் பலியான விவகாரம்: நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மய்யம் இனி செயல்படாது

மதுரை, ஜன.26- 11 வயது சிறுவன் பலியான விவகாரம் காரணமாக நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மய்யம் இனி செயல்படாது என மதுரை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த கவிவர்மன் என்ற சுரேஷ் கண்ணா, மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த மாதம் 30ஆம் தேதி புதுக் கோட்டை நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மய்யத்திலி ருந்து வந்த துப்பாக்கி குண்டு பாய்ந்து 11 வயது சிறுவன் உயிரிழந்தான். இதுபோன்ற சக்திவாய்ந்த துப்பாக்கிகளை பயன்படுத்திய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மய்யத்தை மூடவும் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, சிறீமதி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்குரைஞர் ஆஜராகி, சம்பவம் நடந்த அன்றே, நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சித் தளம் மூடப்பட்டது. இனி இந்த தளம் பயன்படுத்தப்படமாட்டாது என உறுதி அளித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment