புதுடில்லி, ஜன. 26- நாட்டின் 73ஆவது குடியரசு நாளை முன்னிட்டு 2022ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுபவர் களின் பட்டியலை ஒன் றிய அரசு நேற்று (25.1.2022) வெளியிட் டது. இதில் மேற்கு வங் காள மாநில மேனாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் பெயர் பத்ம பூஷன் விருது பட்டியலில் இடம் பெற் றுள்ளது.
இந்நிலையில் தனக்கு பத்ம பூஷன் விருது வேண் டாம் என அவர் நிராக ரித்துள்ளார். இதுகுறித்து புத்ததேவ் பட்டாச்சார்யா வெளியிட்ட அறிக்கையில்,
பத்ம பூஷன் விருது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதைப் பற்றி யாரும் எதுவும் சொல்ல வில்லை. எனக்கு பத்ம பூஷன் வழங்கப்பட்டால், அதை ஏற்கப்போவ தில்லை என்று தெரிவித்துள்ளார்.
அவரது அறிவிப்பை எதிரொலிக்கும் வகை யில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வெளியிட் டுள்ள அறிக்கையில், பத்ம பூஷன் விருதுக்கு பரிந்து ரைக்கப்பட்ட புத்ததேவ் பட்டாச்சார்யா அதை ஏற்க மறுத்துவிட்டார். அரசின் இத்தகைய விரு துகளை நிராகரிப்பது கட்சியின் நிலையான கொள்கையாகும். எங்க ளின் பணி விருதுகளுக்காக அல்ல, மக்களுக்கானது. முன்னதாக வழங்கப்பட்ட விருதை பட்டாச்சார்யா மறுத்துவிட்டார்.
இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment