புதுதில்லி, ஜன.30- டில்லியில் 11 பேர் கொண்ட கும்ப லால் பெண் ஒருவர் பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாக் கப்பட்டு, செருப்பு மாலை அணிவித்து, ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
டில்லியில் கஸ்துரிபா நகரில் 21 வயது திருமணமான பெண்ணை, ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் கடத்திச் சென்று, கும்பலாக பாலியல் வன்கொடு மை செய்துள்ளனர். பின்னர் பாதிக் கப்பட்ட அப்பெண்ணின் தலை முடியை வெட்டி, கருப்பு சாயத்தை ஊற்றி, செருப்பு மாலை அணிவித்து, பொது வெளியில் ஊர்வலமாகவும் அழைத்துச் சென்றனர். இந்த கொடூரச் சம்பவங்கள் அனைத்தையும் நேரில் பார்த்தவர்கள் அலைபேசியில் படம்பிடித்துள்ளனர். சம்பவம் குறித்து அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் , பாதிக்கப் பட்ட பெண்ணை மீட்டு அழைத்துச் சென்றனர்.
இந்த கொடூரச் சம்பவத்தை செய்த அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள டில்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மலிவால், டில்லி காவல் துறைக்கு தாக்கீது ஒன்றை அனுப்பு வதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக 11 பேரை கைது செய்துள்ளதாகவும் அதில் 7 பேர் பெண்கள் என்றும் காவல் துறையினர் தெரி வித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணை, வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்துள்ளார். இந்நிலையில் அந்த இளைஞர் திடீ ரென உயிரிழந்தார். இதனால் அவரது மரணத்திற்கும் இந்த பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி, அந்த வாலிபரின் குடும்பத்தினர் இந்த கொடூரச் சம்பவத்தை செய்துள்
ளனர்.
No comments:
Post a Comment