".... அனைத்து விதத்திலும் ஆர்.எஸ்.எஸ். என்னும் இந்து தேசியவாதத்திற்குத் தடுப்பரணாக மாறி வரும் மகாத்மா காந் தியை அழித்தொ ழித்து, அதன்மூலம் இஸ்லாமியர்களுக்கு எதிரான ஒரு மாபெரும் மதக் கலவரத்தைத் தூண்ட இத்தகைய பின்னணியில்தான் சங்பரிவார் திட்டமிடுகிறது. சாவர்க்கர் தலைமையில் கோட்சே, நாராயண் ஆப்தே உள்ளிட்டோர் அடங்கிய குழு 1948 ஜனவரி 20 அன்று நடத்திய ஒத்திகைக்குப் பிறகு காந்தியை சுட்டுக்கொல்ல 1948 ஜனவரி 30 என்று நாள் குறிக்கப்பட்டது.
ஜனவரி 30 என்று நாள் குறிக்கப்பட்டது கூடத் தற்செயலானது அல்ல; நன்கு திட்டமிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்நாள் ஆர்.எஸ்.எஸ்.சுக்கு விசேஷமான நாள். ஏனெனில் 1933 ஜனவரி 30 என்ற அந்த நாளில்தான் ஜெர்மனியின் சான்ஸ்சிலராக ஹிட்லர் என்னும் வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் தூக்கிப் எறியப்பட்ட மாபாதகன் பதவியேற்றுக் கொண்ட நாள்!
காந்தி சுட்டு வீழ்த்தப்பட்டு சுமார் 74 ஆண்டுகளுக்குப்பிறகும்கூட காந்தியின் உருவப் பொம்மையைச் செய்து, அதில் துப்பாக்கியால் சுட்டு, சிவப்பு மையைக் கொட்டி ஒரு கும்பல் கொக்கரிக்கிறது.."
- கே.சதாசிவன் - எழுதிய கட்டுரையிலிருந்து...
'தீக்கதிர்' - வண்ணக் கதிர் (30.1.2022)
No comments:
Post a Comment