பெகாசஸ் உளவு மென்பொருள் - இந்திய, இஸ்ரேல் ஒப்பந்தம் அம்பலம் நாட்டிற்கு துரோகம் செய்த மோடி அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 30, 2022

பெகாசஸ் உளவு மென்பொருள் - இந்திய, இஸ்ரேல் ஒப்பந்தம் அம்பலம் நாட்டிற்கு துரோகம் செய்த மோடி அரசு

ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடில்லி,ஜன.30- காங்கிரசு கட்சி மேனாள் தலைவர் ராகுல் காந்தி தம்முடைய சுட்டுரைப் பதிவில் குறிப் பிடுகையில், பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் மோடி அரசு நாட்டுக்கு துரோகம் இழைத் துள்ளது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தியா, இஸ்ரேல் இடையே 2017-இல் போடப் பட்ட ஒப்பந்தத் தில் பெகா சஸ் உளவு மென் பொருள் மற்றும் ஏவுகணை மய்யப் புள்ளியாக இருந்ததாக 'தி நியூயார்க் டைம்ஸ்' இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

'நியூயார்க் டைம்ஸ்' இதழ் குறிப்பிட்டுள்ளதாவது, "2017ஆம் ஆண்டு பிரதமர் மோடியின் இஸ்ரேல் பய ணத்தின்போது அவரும் இஸ்ரேல் பிரதமர் (அப் போதைய பிரதமர்) பென் ஜமின் நெதன்யாகுவும் கடற் கரையில் வெறும் கால்களில் நடந்தனர். இந்த உணர்வு களுக்குக் காரணம் இருக் கிறது. அதிநவீன ஆயுதங்கள் மற்றும் நுண்ணறிவு தொடர் புடைய ஒப்பந்தத்துக்கு

இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன. இந்த ஒப்பந் தத்தில் பெகாசஸ் மற்றும் ஏவுகணை மய்யப் புள்ளி யாக இருந்தன. சில மாதங் களுக்குப் பிறகு நெதன்யாகு இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டார்.

இதன் பிறகு, 2019 ஜூன் மாதத்தில் இஸ் ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகை யில், பாலஸ் தீனிய மனித உரிமை அமைப்பு அய்.நா. பொரு ளாதார மற்றும் சமூக கவுன்சிலில் பார்வையாளராக இணைவதற்கு எதிராக இந்தியா வாக்களித்தது"

இவ்வாறு நியூயார்க் டைம்ஸ் இதழில் குறிப்பிடப் பட் டுள்ளது.

இது பெரும் சர்ச்சையை கிளப் பியுள்ள நிலையில், பெகாசஸ் விவ காரத்தில் மோடி அரசு நாட்டிற்குத் துரோகம் செய்துள்ளதாக ராகுல் காந்தி சாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் சுட் டுரைப் பக்கத்தில், "நமது முக்கிய ஜனநாயக நிறுவ னங்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களை உளவு பார்ப்பதற்காக மோடி அரசு பெகாசஸை வாங்கியது. அரசு அலுவலர்கள், எதிர்க் கட்சித் தலை வர்கள், பாது காப்பு படை வீரர்கள், நீதித் துறை என அனைவரும் தொலைபேசி மூலம் ஒட்டு கேட் கப்பட்டுள்ளனர். இது நாட்டுக்கு செய்த துரோகம். மோடி அரசு துரோகம் செய்ததுள்ளது" என பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment