லக்னோ, ஜன.30- “உத்தரப் பிரதேச விவசாயி கள் பாஜகவுக்கு கதவை அடைத்து விட்டனர்” என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் கூறியுள்ளார்.
தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அகிலேஷ் பேட்டி அளித்துள்ளார். அதில், “விவசாயிகளை ஜீப்கள் மூலமாக கொலை செய்வார்கள் என யாராவது நினைத்தார்களா? ஆனால், பாஜக இங்கு விவசாயிகளை அவம தித்து, அவர்கள் மீது தடியடி நடத்தி யதில் பலர் கொல்லப்பட்டனர். பாஜக தலைவர்கள் விவசாயி களை பயங்கரவாதிகள் மற்றும் குண்டர்கள் என்றெல்லாம் அழைத்தனர். எனவே, விவசாயிகள் இந்த முறை பாஜக வுக்கான கதவுகளை அடைத்து விட்டனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஹத்ராஸில் தாழ்த்தப்பட்ட சமூக இளம்பெண்ணுக்கு நடந்த பாலியல் வன் கொடுமை, கோரக் பூரில் தொழிலதிபர் ஒருவர் காவல் துறையால் அடித்துக் கொல்லப் பட்ட சம்பவம், வேலை கேட்டு போராட்டம் நடத் திய ஆயிரக்க ணக்கான இளைஞர்கள்மீது பாஜக அரசு ஏவிவிட்ட அடக்குமுறை ஆகி யவற்றை சுட்டிக்காட்டியிருக்கும் அகிலேஷ், சமாஜ்வாதி ஆட்சிக்கு வந்தால், சட்டம் - ஒழுங்கை மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டு, சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும், விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் வருமானம் இரட்டிப்பு ஆக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment