சென்னை,ஜன.4 சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, வலு தூக்குவதிலும் வீரராவார். சென்னையில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற மாநில அளவி லான 'பெஞ்ச் பிரஸ்' வலுதூக்கும் போட்டியில் முதலிடம் பிடித்து, தேசிய அளவி லான போட்டிக்கு தகுதிபெற்றார்.
பின்னர், கோவாவில் நடை பெற்ற தேசிய அளவிலான வலு தூக்கும் போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்தார். இதன்மூலம் துருக்கியில் நடைபெற்ற ஆசிய அளவிலான போட்டியில் பங் கேற்க தேர்வானார்.
துருக்கியில் 29.12.2021 அன்று நடைபெற்ற வலுதூக்கும் போட்டி யில் 140 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர், ஆசிய அளவில் வலு தூக்கும் போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்று, சாதனை படைத் துள்ளார். மாநிலங்களவை தி.மு.க. உறுப்பி னரும், தி.மு.க. அமைப்புச் செயலாளருமான வழக்குரைஞர் ஆர்.எஸ்.பாரதி சுட்டுரைப்பதிவில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரின் இச்சாதனையை படத்துடன் வெளியிட்டு பாராட்டியுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள தி.மு.க. சட்டமன்ற உறுப்பினருக்கு சமூக ஊடகங்களிலும் பாராட்டுகள் குவிகின்றன.
No comments:
Post a Comment