சென்னை, ஜன.4 ஒமைக்ரான் வைரஸ் பரவல் எதிரொலியாக, கரோனா நோ யாளிகளுக்கான சிகிச்சையில் புதிய நெறிமுறைகளை வகுத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை முதன்மைச் செய லாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கரோனா நோயாளிகளுக்கு அளிக் கும் சிகிச்சைகளில் உள்ள மேம்பாடு தொடர்பான பரிந்துரைகளை நிபுணர் குழு வழங்கி உள்ளது.
அதற்கான வரைவு நெறிமுறைகளை மருத்துவக் கல்வி இயக்குநர் சமர்ப்பித் துள்ளார்.
புதிய நெறிமுறைகள்
அதை அரசு கவனமுடன் பரிசீலித்து அதை அங்கீகரிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, அரசு மற்றும் தனியார் மருத் துவமனைகளில், கரோனா நோயாளிகள் (சந்தேகத்துக்கு இடமானவர் அல்லது உறுதி செய்யப்பட்டவர் என்றாலும்) உடனடியாக சிகிச்சைக்கு உள்ளாக்கப் பட வேண்டும்.
தற்போது உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவக்கூடியதாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே சுகாதாரத்தில் மிகப்பெரிய தாக் கத்தை அது ஏற்படுத்துவதை தடுப்பதற் காக உடனடி கவனிப்பு மற்றும் முன்னெ ச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
போதிய விழிப்புணர்வு இல் லாமையாலும், அதிக பீதியாலும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டியவர் களுக்கு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, இடமில்லாமல் போகி றது.
5 நாட்கள் கவனிப்பு
வீட்டில் தனிமைப்படுத்த வசதி இல்லாத கரோனா நோயாளிகள், கவனிப்பு மய்யங்களுக்கு அனுப் பப்பட வேண்டும். கரோனா தொற்றுக்கு ஆளான கர்ப்பிணிகள், 60 வயதைக் கடந்த நோயாளிகள் கரோனா மருத்துவ மனைகளுக்கு அனுப்பப்பட வேண்டும்.
கடுமையான நோயாளிகள், கரோனா மரணம் போன்றவை பற்றி உயர்மட்ட மய்யங்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். தடுப்பூசி போடாத மற்றும் தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள் கவனிப்பு மய்யங்களில் 5 நாள்கள் வைத்து கவனிக்கப்பட வேண்டும்.
தடுப்பூசி போடாத மற்றும் அறிகுறி இல்லாத இணை நோயாளிகள் வீட்டு தனிமைக்கு அனுப்பப்பட வேண்டும். 6 மணி நேரத்திற்கு ஒருமுறை காய்ச்சல் பரிசோதனையை சுயமாக செய்து கொள்ள வேண்டும். ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மீண்டும் மீண்டும் செய்யப்பட வேண்டியதில்லை.
தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கும், தடுப்பூசி போடாத தொற்று உள்ள வர்களுக்கும் இது அவசியம்.
தனி வார்டு
கரோனா தொற்று உள்ளவர்கள் அதற்கான வார்டுகளில் அனுமதிக்கப்பட வேண்டும். தொற்றுக்கான சந்தேகம் உள்ளவர்கள் தனியான வார்டுகளுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.
உயர் சிகிச்சை தேவைப்படும் நோயா ளிகள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அதற்கான மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும். எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் இந்த நெறிமுறை களில் மாற்றங்கள் கொண்டுவரப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment