புதுடில்லி, ஜன.8 இந்தியாவில் கரோனா தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,41,986 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.
இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 53 லட்சத்து 68 ஆயிரத்து 372 ஆக உயர்ந்தது.
நேற்று முன்தினம் (6.1.2022) பாதிப்பு 1,17,100 ஆக இருந்த நிலை யில், நேற்று ஒரேநாளில் பாதிப்பு 21 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த 28ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து 11 நாட்களாக தினசரி பாதிப்பு நாள் தோறும் 20 சதவீதத் திற்கும் மேல் உயர்ந்து வருவது தொற்று பரவலின் வேகத்தை காட் டுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மகாராட்டிராவில் மேலும் 40,925 பேருக்கு தொற்று கண்டறியப் பட்டுள்ளது. இதில் மும்பையில் மட்டும் 20,971 பேர் அடங்குவர். இது 3-ஆவது அலையில் மும்பையில் இதுவரை இல்லாத அளவில் அதிகம் ஆகும்.
அங்கு நேற்று முன்தினமும் 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து 2-வது நாளாக தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டி உள்ளது. டில்லியிலும் தொற்று பரவல் வேகம் மிக அதிகமாக உள்ளது. அங்கு புதிதாக 17,335 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். அங்கு தொற்று பரவல் விகிதமானது 17.73 சதவீதமாக உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது. 3ஆவது அலையின் தீவிரம் மேற்கு வங்கத்திலும் அதிக மாக உள் ளது. அங்கு புதிதாக 18,213 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.
தமிழ்நாட்டில்....
தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பு 9 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. அங்கு புதிதாக 8,981 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்.
கருநாடகாவிலும் புதிய பாதிப்பு 8,449 ஆக உயர்ந்தது. கேரளாவில் 5,296, உத்தரப்பிரதேசத்தில் 4,223, குஜராத்தில் 5,396, ஜார்கண்டில் 3,825, ராஜஸ்தானில் 3,300, அரியா னாவில் 3,748, பீகாரில் 3,048 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள் ளனர்.
கரோனா பாதிப்பால் கேரளா வில் விடுபட்ட 189 மரணங்கள் உள்பட நாடு முழுவதும் நேற்று (7.1.2022) 285 பேர் இறந்துள்ளனர். இதனால் நாட்டில் இதுவரை கரோனாவுக்கு பலியானோர் எண் ணிக்கை 4,83,463 ஆக உயர்ந்தது.
இதில் அதிகபட்சமாக மகாராட் டிராவில் 1,41,614, கேரளாவில் 49,305 பேர் அடங்குவர்.
கடந்த 10 நாட்களாக மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் அதிகமாக உள்ளனர். நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 3,71,363 ஆக இருந்த நிலையில், தற் போது 4,72,169 ஆக உயர்ந்துள்ளது.
அதாவது நேற்று (7.1.2022) ஒரேநாளில் இந்த எண்ணிக்கை 1 லட்சத்திற்கும் மேல் அதிகரித்தி ருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் மட்டும் 1.45 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். நாடு முழுவதும் இதுவரை மக்க ளுக்கு செலுத்தப் பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 150 கோடியே 61 லட்சத்தை கடந் துள்ளது. இதில் நேற்று மட்டும் 90,59,360 டோஸ் தடுப்பூசிகள் அடங்கும்.
இதற்கிடையே நேற்று 15,29,948 மாதிரிகள் பரிசோதனை செய்யப் பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.
இதுவரை மொத்தம் 68.84 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப் பட்டுள்ளன.
No comments:
Post a Comment