தஞ்சை,ஜன.8- தஞ்சையில் திராவிட மாணவர்கள் சந்திப்பு கூட்டத்தில் இனிவரும் உலகம் மற்றும் சுயமரியாதை திருமணம் ஆகிய இரு புத்தகங்களை தஞ்சையில் உள்ள கல்லூரி மாண வர்களுக்கு அளிக்கப்பட்டு எழுச்சி யுடன் கூட்டம் நடைபெற்றது.
தஞ்சை பிள்ளையார்பட்டி மாவட்ட இணைச்செயலாளர் சா.சந்துரு இல்லத்தில் 5.1.2022 மாலை 5 மணிக்கு திராவிட மாணவர்கள் சந்திப்பு கூட்டத்தில் தஞ்சை மாவட்ட மாணவர் கழக துணைத் தலைவர் ச. சிந்தனை அரசு அனைவரையும் வரவேற்று தஞ்சை மாவட்ட இணைச் செயலாளர் சா.சந்துரு தலைமையில் மாவட்ட இளைஞரணி துணை தலைவர் பா.விஜயகுமார், மாவட்ட தொழி லாளர் அணி அமைப்பாளர் ஆட்டோ ஏகாம்பரம், மகளிர் அணி பொறுப்பாளர்கள் ச.அஞ்சுகம், ஏ.பாக்கியம், குந்தவை நாச்சி யார் அரசு கலைக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் விடுதலை அரசி ஆகியோர் முன்னிலையில் மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன் மாண வர்கள் மத்தியில் திராவிட மாணவர் கழக உருவாக்கம் மற்றும் செயல் பாடுகளைக் குறித்து பேசினார்.
கூட்டத்தில் எழுச்சியுடன் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் அறிவாசான் தந்தை பெரியார் அன்னை மணியம் மையார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆகியோரின் உழைப் பையும் திராவிடர் கழக செயல்பாடு களையும் மூடநம்பிக்கை களையும் அறிவியல் ரீதியாக மாணவர்கள் எதிர் கொள்ள வேண்டிய செயல் பாடுகளையும் குறித்து விரி
வாக எளிமையாக மாணவர்கள் மத்தியில் விளக்க உரையாற்றினார்.
கூட்டத்தில் பெரியார் மணி யம்மை கலை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி, குந்தவை நாச்சியார் அரசு கலைக்கல்லூரி, பூண்டி புஷ்பம் கலை கல்லூரி, மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரி, பொன்னையா ராமஜெயம் பள்ளி ஆகிய கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு சிறப் பித்தனர்.
கூட்டத்தின் இறுதியில் அனைத்து மாணவர்களுக்கும் தஞ்சை மாவட்ட இணைச் செயலாளர் சா.சந்துரு இனிவரும் உலகம் மற்றும் சுயமரியாதைத் திருமணம் ஆகிய புத்தகங்களை மாநில அமைப் பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன் மூலமாக மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது.
மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி மாணவர் கழக அமைப் பாளர் சே. ஆகாஷ் வருகை தந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment