சென்னை, ஜன.3 திருவான்மியூர் முதல் அக்கரை வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலையை 6 வழிச்சாலையாக மாற்றும் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்தநிலையில் 9 ஆண்டுகளுக்கு பிறகு நிலம் கையகப்படுத்தப்பட்ட பாலவாக்கம் பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் 1.50 கி.மீ. நீளத்துக்கு 6 வழிச்சாலையாக மாற்ற ரூ.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையின் பிரதான சாலைகளில் ஒன்றாக கிழக்கு கடற்கரை சாலை உள்ளது.
நெரிசலால், பயண நேரமும் அதிகரிக்கிறது. இதனால், ஆறு வழி சாலையாக மாற்ற, 2006ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இதையடுத்து, திருவான் மியூர் ஆர்.டி.ஓ., அலுவலக சந்திப் பில் இருந்து, அக்கரை வரை, 12 கி.மீ., தூரத்தை, ஆறு வழியாக மாற்றும் பணி, கடந்த 2012இல் துவங்கியது. இந்த நிலையில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக பாலவாக்கம் பகுதியில் மட்டும் நிலம் கையகப் படுத்துவதில் சிக்கல் நீடித்து வந்தது.
இந்த வழக்கு நெடுஞ்சாலைத் துறைக்கு சாதகமாக தீர்ப்பு வந் ததை தொடர்ந்து, 9 ஆண்டுகளுக்கு பிறகு நில எடுப்பு பணிக்காக நிதியை சம்பந்தப்பட்ட உரிமையா ளர்களுக்கு வழங்கப்பட்டன. இதை யடுத்து, பாலவாக்கம் பகுதியில், 1.50 கி.மீ., தூரத்தில், நூறடியாக சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக, ரூ.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ள அரசணையில் கூறியிருப்பதாவது:
நெடுஞ்சாலைத்துறை பாலவாக்கம் கிராமத்துக்குட்பட்ட கி.மீ. 13/615 முதல் 14/550 கி.மீ. வரை கிழக்கு கடற்கரை சாலை 6 வழிச்சாலை விரிவாக்க பணிக்கு ரூ.17.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. நடப் படாண்டில் ரூ.2 ஒதுக்கீடு செய்யப் படுகிறது. ரூ.13.55 கோடியில் கட்டுமானப் பணிக்கும், அறிவிப்பு பலகை ரூ.15 லட்சம், விளக்கு அமைக்க ரூ.30 லட்சம், செடிகள் வைக்க ரூ.15 லட்சம் உட்பட பல்வேறு பணிகளுக்கு என மொத்தம் 17.16 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment