கரோனா தடுப்பு பணியில் - 1000 பணியாளர்கள் நியமனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 3, 2022

கரோனா தடுப்பு பணியில் - 1000 பணியாளர்கள் நியமனம்

மாநகராட்சி கூட்டத்தில் முடிவு : அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி

சென்னை,ஜன.3 சென்னை மாநகராட் சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் கரோனா தொற்றுப் பரவல் மற்றும் மரபியல் மாற்றமடைந்த ஒமிக்ரான் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த மேற்கொள் ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தலைமையில் ரிப்பன் மாளிகையில்   நடைபெற்றது. 

ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியா ளர்களுக்கு அளித்த பேட்டி:

சென்னை மாநகராட்சியில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட 1000 பணியா ளர்களை நியமிக்க முதலமைச்சர் உத்தர விட்டுள்ளார்.  வார்டுக்கு 5 பணியாளர்கள் வீதம் 200 வார்டுக்கு 1000 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, இவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களையும், மருந்துகள் மற்றும் உணவுகள் உள்ளிட்ட அனைத்து தேவை களையும் நேரடியாக அவர்களின் வீட்டிற்கே சென்று வழங்கும் பணியை மேற்கொள்வார்கள். மேலும், தனிமைப் படுத்தப்பட்டவர்கள் விதிகளை முறையாக கடைப்பிடிக்கிறார்களா என தொடர்ந்து கண்காணிக்கும் பணிகளை யும் மேற்கொள்வார்கள்.

  ஒவ்வொரு மண்டலங்களிலும், தொலைபேசி வாயிலாக ஆலோசனை வழங்கும் வகையில் 15 மய்யங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதுகாப்பு மய்யங்களில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 21 கரோனா பரிசோதனை மையங்கள் கடந்த வருடம் செயல்பட்ட இடங் களுக்கு அருகிலேயே ஏற்படுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் ரிப்பன் கட்டடத்தில் செயல்பட்டுவரும் கரோனா கண்காணிப்பு மய்யத்தை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மண்டல அமலாக்கக்குழு மூலம் அபராதம் விதிக்கும் பணி தீவிரப்படுத்தப் படும்.  இதற்கென மண்டலத்திற்கு 2 குழு வீதம் 15 மண்டலங்களுக்கு 30 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. கரோனா தொற்றுப் பாதிக்கப்பட்ட நபர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஒவ்வொரு மண்டலத்திற்கும் 2 வாக னங்கள் பயன்பாட்டில் உள்ளன.  தொற்று பரவல் அதிகம் உள்ள பகுதி களில் கூடுதலாக 20 கார் ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

சென்னை மாநகராட்சியில் தினசரி 25,000 கரோனா  பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.  இதனை நாளொன்றிற்கு 30,000 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  மேலும், சென்னை மாநகராட்சி மருத்துவமனை களில் உள்ள 1000 ஆக்ஸிஜன் செரிவூட்டிகள் தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பூஜ்ஜியம் நோக்கி தொற்று நகர்ந்து வந்த நிலையில் மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது. இன்னும் அதிகமாகும் என அச்சம் உள்ளது. ஒமிக்ரான் 3 முதல் 4 மடங்கு வேகமாக பரவும் என்பதால் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். முகக் கவசம் அணியவில்லை என்றால் அப ராதம் வசூலிக்கப்படும். கடந்த அலையில் மாநகராட்சி சார்பில் கார் ஆம்புலன்ஸ் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதே போல் இப்போது உடனடியாக 20 கார் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்குள் 15 - 18 வயது சிறார்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தி முடிக் கப்படும். ஒன்றிய அமைச்சர் உடனான கூட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிக்காக தமிழ்நாட்டிற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment