தமிழ்நாட்டில் புதிதாக 1,728 பேர் கரோனாவால் பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 4, 2022

தமிழ்நாட்டில் புதிதாக 1,728 பேர் கரோனாவால் பாதிப்பு

சென்னை, ஜன.4 தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,728- பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. நேற்றுமுன்தினம் (2.1.2022) தினசரி பாதிப்பு 1,594- ஆக இருந்தது. நேற்றைய (3.1.2022) பாதிப்பு 1,728- ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பால் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

 தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 10,364- ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து நேற்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 662- ஆக உள்ளது.

 தமிழ்நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,52,856 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 876- பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் முதல் நாளில் 40 லட்சம் சிறுவர்களுக்கு கரோனா தடுப்பூசி

ஒன்றிய சுகாதாரத்துறை

புதுடில்லி, ஜன.4 கரோனாவுக்கு எதிராக 15-18 வயது சிறுவர், சிறுமியருக்கு நேற்று (3.1.2022) முதல் தடுப்பூசி போடப்படுகிறது.

இந்தியாவில் குழந்தைகளுக்கு கரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணி தொடங்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த 25ஆம் தேதியன்று பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரை ஆற்றினார். அப்போது அவர் கரோனா பரவலை தடுக்க 15 முதல் 18 வயது வரையுள்ள சிறுவர், சிறுமிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 3ஆம் தேதி தொடங்குகிறது என அறிவித்தார்.

இதன்படி இன்று சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் தொடங்கியது. நாட்டில் 3ஆவது அலை பரவலுக்கு மத்தியில் சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்றது.

முதல் நாளான நேற்று 40 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டதாக  ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா தெரிவித்துள்ளார்.

15-18 வயது வரம்பிலான அனைவருக்கும் கோவேக்சின் தடுப்பூசி போட மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு

பயோ மெட்ரிக் பதிவு நிறுத்தம்

புதுடில்லி, ஜன.4 கரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு பயோ மெட்ரிக் பதிவு நிறுத்தப்படுகிறது.

நாட்டில் கரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருவகிறது.

கரோனா பரவுவதை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பணி வருகைக்கான பயோ மெட்ரிக் பதிவு நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த தகவலை ஒன்றிய பிரதமர் அலுவலகம் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மறுஉத்தரவு வரும் வரை இது தொடரும் என்றும், ஒன்றிய அரசு ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி ஒன்றிய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்

ஜனவரி 5ஆம் தேதி கலைவாணர் அரங்கில் தொடங்குகிறது

பேரவைத் தலைவர் பேட்டி

சென்னை, ஜன.4  கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் 5.1.2022 அன்று தொடங்க உள்ளதாக சட்டப்பேரவை பேரவைத் தலைவர் மு.அப்பாவு நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 கோட்டையில் நடைபெறுவதாக இருந்த சட்டப்பேரவைக் கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை பேரவைத் தலைவர் மு.அப்பாவு நேற்று (3.1.2022) செய்தியாளர்களைச் சந்தித்து இதுகுறித்த விவரங்களைத் தெரிவித்தார்.

கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அப்பாவு பதிலளித்துக் கூறியதாவது:

‘’தமிழ்நாட்டில் 1 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்குத் தடுப்பூசி போடும் பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். கரோனா எவ்வளவு வேகமாக வந்தாலும் அதைக் கட்டுப்படுத்தக் கூடிய அளவுக்கு முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அதற்கான மருத்துவர்கள், மருத்துவமனையில் படுக்கை வசதிகள், மருந்துகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதனால் யாரும் பயப்படவோ, அச்சப்படவோ தேவையில்லை.

முதலமைச்சரும் முன்னெச்சரிக்கையோடு செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெற இருந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரை இடைவெளிவிட்டு கலைவாணர் அரங்கத்தில் நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.

கடந்த ஆண்டு சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கி, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு எல்லா கோரிக்கைகளும் எப்படி நடந்ததோ அதே நடைமுறையில் இந்த ஆண்டும் நடைபெறும். யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் சிறப்பாக நடைபெறும்‘’.

இவ்வாறு பேரவைத் தலைவர் மு.அப்பாவு

தெரிவித்தார்.

No comments:

Post a Comment