சென்னை, ஜன.27 தமிழ்நாட்டில் மொத்தம் 146 தெருக்கள் கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளன என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்தது. தினசரி பாதிப்பு 30 ஆயிரம் தொட்டு மக்களை அதிர்ச்சி யில் ஆழ்த்தியது. தமிழ்நாட்டில் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப் பட்டு உள்ளன.
அதன்படி தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப் பட்டுள்ளன.
கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங் களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப் பட்டு உள்ளது. பள்ளி, கல்லூரி களுக்கு விடுமுறையும் அறிவிக்கப் பட்டு உள்ளது.
கரோனா பரவலை கட்டுப்படுத் துவதற்காக பரிசோதனைகள் அதி கரிக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாடு முழுவதும் இதுவரை 19 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற் றுள்ளன. எனினும், தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக முந்தின நாட்களுடனான ஒப்பிடுதலில், தொற்று குறைந்து வந்தபோதிலும், முன் எச் சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
இதன் தொடர்ச்சியாக, தமிழ் நாட்டில் 18 மாவட்டங்களில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. இதன்படி, 146 தெருக்கள் கரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதி களாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அவற்றில், அதிகபட்சமாக சென்னை யில் 70 தெருக்கள் கட்டுப் பாட்டு பகுதி களாக உள்ளன என்று தமிழ் நாடு அரசு அறிவித்து உள்
ளது.
No comments:
Post a Comment