தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, ஜன.28 பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து பள்ளி ,கல்லூரிகளும் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது .
தமிழ்நாட்டில் கரோனா தொற்று ஓரளவு குறைந்து வருகிறது. ஆனாலும் 30 ஆயிரம் என்ற அளவில் நாளொன்றுக்கு தொற்று ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தொற்றின் நிலையை ஆய்வு செய்யவும், தமிழ்நாட்டில் மேலும் தளர்வுகளை அனுமதிக்கலாமா? என்பது பற்றியும் மருத்துவ நிபுணர்கள், குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நேற்று (27.1.2022) நடைபெற்றது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது .
பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 1 முதல் 12 வகுப்புவரை நேரடி வகுப்புகள் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கல்லூரிகளுக்கு பருவமுறைத் தேர்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி இணைய வழியிலேயே நடைபெறும் என்றும், தேர்வு இல்லாத நாட்கள் கல்லூரிக்கு மாணவர்கள் வரவேண்டும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment