பகுத்தறிவாளர் மதுரை தமிழரசனுக்கு நமது வீர வணக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 28, 2022

பகுத்தறிவாளர் மதுரை தமிழரசனுக்கு நமது வீர வணக்கம்

மதுரை ஆசிரியரும், சீரிய பகுத்தறிவாளரும் பெரியார் பெருந்தொண்டருமான மானமிகு தோழர் தமிழரசன் அவர்கள் (வயது 84) இன்று (28.1.2022) மதுரையில் மறைந் தார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகவும் வருந்து கிறோம்.

 தோழர் ஆசிரியர் தமிழரசன் அவர்கள் நமது பெண்ணியப் போராளி தோழர் ஓவியா அவர்களின் அன்புத் தந்தையார் ஆவார்கள். அவருக்கு வாழ்விணையர் தோழர் கண்மணி தமிழரசன் மற்றும் நீலா, முத்துமொழி, கவிதா ஆகிய மகள் களும் உள்ளனர்.

சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பே நீலகிரி மாவட்டத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்தபோது, அங்கே பகுத்தறிவாளர் கழகத்தை ஏற்படுத்தி ஊட்டியில் .. மாநாட்டை டாக்டர் கோவூரை அழைத்து நடத்தியவராவார்.  பலத்த எதிர்ப்புகளைச் சந்தித்தும் அயராது பணியாற்றி, நெருக்கடி காலத்தில் அன்றைய அரசால் மிகவும் துன்பப்பட்ட கொள்கை வீரர். 'மிசா'வில் இருந்தவர்.

எவரிடமும் அன்புடன் பழகும் சுபாவம் உள்ளவர். சிறிது காலமாக நம்முடன் தொடர்பு இல்லாத நிலையில், திடீரென்று இத்தகவல் மிகுந்த வேதனையைத் தருகிறது.

அவரை இழந்து வாடும் தோழர்கள் ஓவியா, திருமதி கண்மணி தமிழரசன் குடும்பத்தினர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவருக்கு நமது வீர வணக்கம்.

 கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை       

28-1-2022          

No comments:

Post a Comment